குரு உபதேசம் – 4162
முருகப்பெருமானை வணங்கிட : நாம் செலுத்துகின்ற பக்தியை ஏற்றுக்கொண்டு நாமும் அவனைப்போல் ஆகலாம் என்கிற உண்மையையும் அதற்குரிய வழிமுறைகளை வாய்ப்புகளையும் அறியலாம். விரைந்து வந்தே வேற்படை முருகா சிறந்த ஆட்சி செய்திடல் நலமே.
முருகப்பெருமானை வணங்கிட : நாம் செலுத்துகின்ற பக்தியை ஏற்றுக்கொண்டு நாமும் அவனைப்போல் ஆகலாம் என்கிற உண்மையையும் அதற்குரிய வழிமுறைகளை வாய்ப்புகளையும் அறியலாம். விரைந்து வந்தே வேற்படை முருகா சிறந்த ஆட்சி செய்திடல் நலமே.
முருகனை வணங்கிட : ஞானவாழ்வை பெறவும், மரணமிலாப் பெருவாழ்வை பெறவும், மனிதனாய் பிறந்த அனைவருக்கும் வாய்ப்புகள் இருந்தும் அவர்களால் பெற முடியாமல் போனதற்கு காரணம் என்னவெனில் அவரவர் முன்ஜென்மங்களே உயிர்களை கொன்றதாலும், புலால் உண்டதாலும், பிறர் சொத்தை அபகரித்ததாலும், நன்றி மறந்ததாலும், வஞ்சனை செய்து ஏமாற்றியதாலும் இப்படி பலபல வழிகளிலே அவர்கள் செய்திட்ட பாவங்களெல்லாம் பாவவினைகளாக மாறி வாய்ப்பிருந்தும் ஞானத்தைப் பற்றியோ மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றியோ அறியவொட்டாமல் தடை செய்கிறது. அப்படியே அறிந்து கொண்டாலும் அந்த துறையில் … Read more
முருகனை வணங்கிட : காலத்தையும் காலனையும் வென்ற கந்தபெருமான் திருவடியைப் போற்றி வணங்கிட காலனை வெல்லும் உபாயத்தினை பெறலாம். அதுவே சிறப்பறிவாகும். நமனை வென்ற ஞானிகள் திருவடியை இமைப்போதும் மறவாது இருத்துவோம் நெஞ்சினுள்.
முருகனை வணங்கிட : ஜீவதயவு, ஜீவகாருண்யம், அன்பு செலுத்தல், தயவு காட்டல், கருணை செய்தல், விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், தீயன மறத்தல், அரவணைத்தல், ஒத்து போதல் என ஜீவர்களுக்கு மகிழ்வையும், நன்மையும் பயக்கக்கூடிய அனைத்து நல்ல பண்புகளுமே முருகன்தான் என்பதை அறியலாம். ஆதலின் உலகினிலுள்ள அனைத்து நற்பண்புகளுமே முருகன் அருள்கொடைதான் அவனே நற்பண்பாய் நம்முள் தோன்றுகிறான், நற்பண்பே முருகனாயும் ஆகிறான் என்பதை அறிவதே சிறப்பறிவு அதை கற்பதே சாகாக்கல்வி. தயவு என்பதே முருகனாகும், முருகப்பெருமானே தயவாகும். அற்புதன் … Read more
முருகனை வணங்கிட : உயிர்க்கொலை செய்யாது புலால் உண்ணாதிருக்கவும் உள்ள வாய்ப்பையும், சைவ நெறிகளை கடைப்பிடித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் வைராக்கியமும் அறிவையும் பெறலாம்.
முருகனை வணங்கிட : முருகப்பெருமானை மனமுருகி பூசித்து ஆசி பெறாவிடில் இந்த உலகினில் அவர் தமக்கு ஒன்றும் இல்லை இல்லை, எதுவுமே இல்லை என்பதை உணரலாம். வள்ளல் முருகனை வாழ்த்தி வணங்குவோம் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம். முற்றும் உணர்ந்த முருகன் திருவடியை பற்றிக் கொள்வதே பயனுடைய செயலாகும்.
முருகனை வணங்கிட : உயிர்களுக்கு தொண்டு செய்கின்ற அற்புதமான வாய்ப்பையும் அதற்குரிய அறிவையும் பெறலாம். அன்போடு ஆற்றலும் அருளும் பொருந்திய பண்பாளன் முருகன் பதத்தை போற்றுவோம். அன்போடு ஆற்றலும் அமைதியும் பொருந்திய பண்பாளன் முருகன் பதத்தை போற்றுவோம். அள்ளக்குறையா அமுதப் பெருக்காம் வள்ளல் முருகனை வாழ்த்தி வணங்குவோம்.
முருகனை வணங்கிட : ஜென்மத்தைக் கடைத்தேற்றிட முருகப்பெருமானின் அருளை பெறாமல் எவ்விதத்திலும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியாது என்பதை அறியலாம். புண்ணிய முருகன் பொன்னடி போற்ற எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தி. மனமாயை அற்ற முருகன் திருவடியே இனமாக போற்ற இன்பம் உண்டாம்.
முருகனை வணங்கிட : நிலையில்லாததை நிலையென்று நம்பி மயங்குகின்ற மயக்கம் நீங்கி எது நிலையானது எது நிலையற்றது என்பதை உணருகின்ற தெளிவான அறிவைப் பெற்று அந்த நிலையான ஒன்றை அடையும் மார்க்கம்தனை உணர்த்துவான் முருகப்பெருமான். வேதியியல் அறிந்த வித்தகன் முருகனை சாதகத்துக்கு துணையென்றே சாற்றுதல் நலமே.