குரு உபதேசம் 4371
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்…. தற்காலத்தில் தவறு செய்வோர் தமக்கு உண்டான பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், செல்வாக்கினாலும் தவற்றின் தண்டனையிலிருந்து தப்புவதோடு, தவறு செய்யவும் அஞ்சுவதில்லை. ஆனால் வருங்காலங்களிலே தவறு செய்தோர் ஞானிகளால் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதையும் அறியலாம். மணிவாசகப் பெருமானின் மலரடி போற்றிட அணிமா சித்தியும் அடைவார் திண்ணமே. மகத்துவம் மிக்கதோர் மணிவாசகப் பெருமானை அகத்துள் வைத்தே ஆராதனை செய்வோம்.


