Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4534

அகத்தீசனை வணங்கிட : சாதாரண மனிதனையும் ஞானியாக்கும் வல்லமை மகான் அகத்தீசனுக்கே உண்டு என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4533

அகத்தீசனை வணங்கிட : உடம்பாகிய சந்திரகலையையும், உயிராகிய சூரியகலையையும், அக்கினி கலையாகிய புருவமத்தியில் சேர்க்க வேண்டுமென்றும், அதுவே சாகாக்கல்வி என்றும் அந்த சாகாக்கல்விக்கு தலைவன் முருகப்பெருமான்தான் என்பதையும் அகத்தீசன் ஆசியால் அறியலாம்.

குரு உபதேசம் 4532

அகத்தீசனை வணங்கிட : உலக வாழ்விற்காக கற்ற கல்வியின் துணை கொண்டே பரவாழ்வாகிய மோட்ச லாபத்தை அடைவதற்கான பரவாழ்க்கை கல்வியை கற்க வேண்டும் என்பதை அகத்தீசர் அருளால் அறிந்து கொள்ளலாம்.

குரு உபதேசம் 4531

அகத்தீசனை வணங்கிட : அகத்தீசன் ஆசி பெற்ற ஒன்பது கோடி ஞானிகள் ஆசியை “அகத்தீசா” என அழைப்பதின் மூலம் ஒரு நொடியில் பெறலாம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4530

அகத்தீசனை வணங்கிட : உயிர்க்கொலை செய்து புலால் உண்ணுகின்ற மக்களிடம் ஜீவதயவை எதிர்பார்ப்பது என்பது கடும் இருட்டிலே கடுகைப் பொறுக்கி கணக்கெடுப்பது போலாகும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4529

முருகா என்றால்: பல பல ஜென்மங்களிலே செய்த பாவங்களையெல்லாம் அவரவர் செய்திட்ட பாவத்தின் பயனை ஒவ்வொன்றாக அனுபவிக்க செய்து பாவவினை நீக்கி காத்து, இரட்சித்து, வீடுபேற்றினை அருள்வான் முருகன் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4528

முருகா என்றால்: உலக நன்மைக்காகவே அவதாரம் செய்தவன்தான் முருகப்பெருமான் என்றும் அவன் திருவடியை பற்றி பூசித்து ஆசிபெறுவதே அறிவு என்றும் அதுவே சாகாக் கல்வி என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4527

முருகா என்றால்: பொருள் மீது பற்றறச் செய்தும், பொது சேவையில் ஆர்வத்தை உண்டு பண்ணியும், தன் திருவடியை தொடர்ந்து பற்றச் செய்தும், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய ஆர்வத்தை உண்டு பண்ணியும் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்வான் முருகப்பெருமான்.