admin
குரு உபதேசம் – 4175
முருகனை வணங்கிட: மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்களை உணரச் செய்தும் மீண்டும் அதுபோன்ற குற்றங்கள் ஏற்படாவண்ணம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறிவைப் பெறலாம். மகத்துவம் பொருந்திய மணிவாசகப் பெருமானை அகத்துள் வைத்தே ஆராதனை செய்வோம். முற்றும் உணர்ந்த முருகன் திருவடியை பற்றிக் கொள்வதே பயனுடைய செயலாகும். தாய்மை குணம் தந்த முருகனை வாய்மையாய்ப் போற்றி வழிபடுதல் நலமே. கற்றதன் பயனே கழல் பணிதல் என்றே உற்றநல் அறிவென்றே உண்மை உணர்வோம்.
குரு உபதேசம் – 4174
முருகனை வணங்கிட: என்றும் நிலைப்பெற்று அருளுகின்ற முருகப்பெருமான் திருவடியே உண்மை என்று அறியலாம். பகலவனாம் முருகனின் பாதம் பணிந்திடவே இகல்எல்லாம் விலகியே இன்பம் உண்டாம்.
குரு உபதேசம் – 4173
முருகனை வணங்கிட: சதானந்த நிலை நின்று அருட்பெருஞ்ஜோதி வடிவினனாகி எண்ணிலா கோடி பரந்து விரிந்து அருள் பிரகாசமாய் சொல்லொண்ணா பேரானந்த நிலை நின்று அருளும் முருகப்பெருமான் அமைதியுடன் பேரானந்த நிலை நின்று அருள் புரிகின்றனன். பேரானந்த நிலை நிற்கும் முருகனை அழைத்தாலன்றி நம்மீது அவன்தன் அருட்கண் பார்வை திரும்பாது. இவ்வுலகினிலே உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு ஜீவதயவின் வழியில் தூய நெறி வழி நடந்து, எவ்வுயிருக்கும் தீங்கு நினையாது உள்ள மென்மையான … Read more
குரு உபதேசம் – 4172
முருகப்பெருமான் திருவடிகள் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், கடல்கொந்தளிப்பு, நிலநடுக்கம், புயல், மிகுதி மழை ஆகியவை முருகப்பெருமானின் ஆசியால் கட்டுப்படுத்தப்படும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 4171
முருகனை வணங்கிட: உலகத்தில் அதர்மம் மிகுதியாகும் போதெல்லாம் ஞானத்தலைவன் முருகப்பெருமானே விஷ்ணுபகவானாகவும், அகத்தியராகவும், அவதாரங்களாகவும் தோன்றி அதர்மத்தை அழித்து நீதியை நிலை நாட்டினான் என்பதை அறியலாம். தாயினும் மிக்க தயவுடை தனிப்பெருங்கருணை தெய்வம் முருகப்பெருமானே வேற்படை கொண்டு அதர்மத்தை அழித்து பண்புடையோரை காப்பான் என்பதையும் அறியலாம். பொல்லா மாமாயை சூழ் கலியுகம் காக்க மக்களை மீட்க ஞானயுகம் அமைக்க அவனே ஞானியாக அரங்கர் வடிவினில் அவதரித்துள்ளதையும் அறியலாம். பூரணமாக பூவுலகை ஆளவே வாரணக்கொடியோன் வருவான் உண்மையே.
குரு உபதேசம் – 4170
முருகனை வணங்கிட: சிற்றின்பத்தில்தான் பேரின்பம் உள்ளதென்பதை முற்றும் உணர்ந்து சிற்றின்பத்தினை வென்று பேரின்பத்தை அடைந்து முற்றுப்பெற்ற முதல் முனிவன் முருகப்பெருமான்தான் என்பதை அறிந்து கொள்ளலாம். பேரின்ப நிலை எய்திய முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றினாலன்றி சிற்றின்பத்தின் இயல்பையோ, பேரின்பத்தின் இயல்பையோ அறிய முடியாது என்றும், சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்தை அடையும் வழிமுறையையும் அறிய முடியாது என்பதையும் தெளிவாக அறிந்து கொண்டு பேரின்பமளிக்கும் அதிகாரம் முருகப்பெருமான் ஒருவனுக்கே உண்டென்பதையும் அறிந்து கொள்ளலாம். அணுக அணுக அருளும் உபதேசம் அணுக அணுகவே ஆனந்தமாமே.
குரு உபதேசம் – 418
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், உலகத்தில் சென்ற காலம், வருங்காலம், நிகழ் காலம் என்கிற முக்காலமும் உணர்ந்த முருகப்பெருமான் பிரச்சனைகள் உருவாவதற்கு முன்னரே, உணர்ந்து பிரச்சனைகள் வருவதற்கு முன்பே தீர்த்து விடுவான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 4169
முருகனை வணங்கிட: சுக்கிலமாகிய விந்துவை சுத்தி செய்தால் காமத்திற்கு காரணமான அந்த விந்துவே என்றும் அழியாத பேரின்பத்தை தரவல்லதாக மாறும் என்பதை அறியலாம். சுத்த சுக்கில தேகமே சொர்ணதேகமாக மாறும். அரிய பொருளை அரிய தமிழால் அருளி நின்றான் முருகனே உரிய பொருளை உரிய நேரத்தில் ஓதுவிப்பான் உண்மையே.