admin
குரு உபதேசம் 4501
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. தர்மம் செய்வோர் தன்னலமற்று தர்மங்கள் செய்தாலும் தர்மத்தின் வழியில் சென்றவர்க்கு வறுமை ஏற்படாது. அப்படி ஏற்படுமேயானால் அது தர்மம் செய்பவரின் குற்றமல்ல, தர்மம் செய்யும் யுகமான கலியுகத்தின் மக்களின் பாவச்சுமை மிகுந்துள்ளதினால் தர்மம் செய்வோர்க்கும், உலக மக்களின் பாவச்சுமைகள் பற்றுவதாலே அவர்களுக்கு தற்காலிகமாக வறுமை வருகிறது என்றும், தொடர்ந்து தளராது தர்மம் செய்ய செய்ய தர்மம் கலியுகப் பாவத்தை வென்று தலைதூக்கி வளமான வாழ்வைத் தரும் என்பதையும் தர்மத்திற்கு சோதனை வருவதும், … Read more
குரு உபதேசம் 4500
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இவ்வுலகினில் கல்வி கற்றோர் ஏராளமாய் இருந்தபோதும் அவர்களது கல்வி வெறும் ஏட்டுக்கல்வியாகவே அதாவது வாழ்வியல் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கல்வியாகவே உள்ளது. அது ஒருவகை திறமை. ஆயினும் அது நமக்கு வர இருக்கும் துன்பத்தையோ, வினையையோ, மரணத்தையோ தடுக்க இயலாத கல்வியாகும். அகத்தீசனை மனமுருகி பூஜிக்க பூஜிக்க இந்த ஏட்டு கல்வியை பல்காலம் பயின்று கல்வி கற்றவன் என பெருமிதம் கொள்ளும் மாயையிலிருந்து முதலில் விடுபட வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். சரி உண்மையான … Read more
குரு உபதேசம் 4499
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இல்லறம், துறவறம், ஞானம் என மனிதனின் அனைத்து வாழ்வியல் நெறிமுறைகளுக்கும் தலைவன் முருகனே என்பதை அறியலாம். முருகனது அருளினால்தான் இந்த மூன்றில் எந்த ஒரு நெறியை மேற்கொண்டாலும் பாதுகாப்பாய் செல்ல முடியும் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் 4498
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மரணமிலாப் பெருவாழ்வு என்ற பிறப்பு இறப்பற்ற நிலை ஒன்று உண்டென்றும், மோட்ச லாபம் என்ற நிலையும் உண்டென்றும் அறியலாம்.
குரு உபதேசம் 4497
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற நிலை உலகெங்கும் உருவாகி இறையருள் பெறுவதற்கு உண்டான ஒரே உண்மையான வழி ஜோதி வழிபாடுதான் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் 4496
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. அன்னதானத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும், முருகப்பெருமானின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், முருகனை வணங்காதோரும், சைவத்தில் நம்பிக்கை இல்லாதவரும் எவ்வளவுதான் கல்வி கற்ற பெரும் அறிவாளியாக இருந்தாலும், வல்லமைப் பெற்ற செல்வராய் இருந்தாலும் அவர்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கமாட்டான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4495
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. தன்னை காத்துக் கொள்ள சிலர் உடற்பயிற்சிகள் செய்வார்கள், உடம்பை பாதுகாக்கஉடற்பயிற்சி தேவைதான். ஆனால் உயிர் பாதுகாப்பை எவ்வாறு பெறுவார்கள்? உடம்பு எவ்வளவு வலிவுடையதாய் இருப்பினும் உயிரில்லையேல் வலிவுள்ள உடம்பிற்கு மதிப்பில்லை என்பதை உணரமாட்டார்கள். தனது வாழ்வு வளம்பெற பொருளீட்டுவார்கள், உயிர் பலம் பெற என்ன செய்தார் என்றால் ஒன்றுமில்லை. இப்படி அழியக்கூடிய உடம்பிற்காக எத்தனை எத்தனை பாதுகாப்பு, அலங்காரம், ஆராதனை, பொருள் சேமிப்பு என வாழ்நாளை வீணாக்குவதைவிட எல்லாம்வல்ல காக்கும் தெய்வம் முருகன் … Read more
குரு உபதேசம் 4494
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. இதுநாள் வரையில் உலகில் உள்ள சாதிகளின் பெயராலும் மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் அரசியலின் செல்வாக்காலும், நாட்டு மக்களுக்கு செய்த அராஜகம் அனைத்தும் ஞானபண்டிதன் முருகப்பெருமானால் கட்டுப்படுத்தப்பட்டு, ஞானஆட்சி ஏற்பட்டு நாடே முருகனருளால் சுபிட்சமாகும் என்பதை அறியலாம்.


