குரு உபதேசம் – 4178
முருகப்பெருமானை வணங்கிட: பக்தியும், சித்தியும், முக்தியும் தருவது முருகப்பெருமானின் திருவடிதான் என்று அறியலாம். புலன் ஐந்து வென்ற புண்ணியன் முருகனை நலம் பெறவே போற்றுவோம் நாளும் துதித்தே. சத்தியவான் முருகன் தாளைப் போற்றிட நித்திய வாழ்வு நிலைத்திடும் உண்மையே. காயத்தை அமுதாய் கண்ட முருகனை மாயத்தே காண்டல் மாண்பு.


