admin
குரு உபதேசம் 4230
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவனது குடும்பமே பெருமைக்குரிய குடும்பமாக மாறும். செந்திலம் பழனி குன்றம் திருத்தணி வடமலைவாழ் விந்தையாய் நடனம் செய்யும் வித்தகன் திருவடியை விரும்பியே போற்றுவோம்.
குரு உபதேசம் 4229
முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட : செல்காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய இக்காலத்தையும் அறிகின்ற அறிவைப் பெறலாம். தன்னையே அறியக் கூடிய பண்பையும் பெறலாம். தினைப்பொழுது அளவேனும் திருவடியை சிந்திக்க நினைத்தவை அனைத்தும் நிச்சயம் நடைபெறும்.
குரு உபதேசம் 4228
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி, தொடர்ந்து பூஜை செய்யசெய்யத்தான் முருகப்பெருமான் தான், ஞானத்தின் கடவுள் என்றும், யாருக்கும் எளிதில் அகப்படாத முருகனே ஞானத்தலைவன், அவனே அனைத்திற்கும் காரணமாகியுள்ளான் என்பதையும் உணர்ந்து முருகனது திருவடி துணையின்றி யாதொன்றும் ஆகாது என்பதையும் அறிந்து தெளியலாம். தெளிந்து தொடர்ந்து பூஜை செய்ய, பூஜை செய்ய முருகனது திருவருளை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
குரு உபதேசம் 4227
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஒரு நொடிக்குள் உலகினில் உள்ள எல்லா செயல்களையும் அறிந்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் அற்புதமான ஆற்றல் உடையவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். உலகத் தலைவன் ஓங்கார நாதனே கலகத்தை அடக்கி காப்பான் உலகையே. சுந்தர வேலவன் தொல்புவி ஆண்டிட வந்திடும் நல்வாழ்வு வளமே. – மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்.
குரு உபதேசம் 4226
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இனி வரும் காலங்களில் முருகப்பெருமானின் தலைமையில் உள்ள ஞான ஆட்சியிலே மக்கள் பிரச்சனைகள் எல்லாம் உடனுக்கு உடன் ஆராய்ந்து பார்த்து தீர்த்து வைக்கப்படும் என்பதை அறியலாம். பலமான வேலவன் பாருலகை ஆண்டிட நலம்பல உண்டாகும் நாட்டிற்கே. – மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்.
குரு உபதேசம் 4225
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : மரணமிலாப் பெருவாழ்வை கண்டுபிடித்து முதன்முதலில் மரணமிலாப் பெருவாழ்வை அடைந்தவன் முருகப்பெருமான் தான் என்றும், அவனது அளவிடற்கரிய கருணையால்தான் மரணமிலாப் பெருவாழ்வை ஒன்பது கோடி ஞானிகளும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டு மரணமிலாப் பெருவாழ்வை அடைய முடிந்தது என்றும், முருகனது கருணையே மரணமிலாப் பெருவாழ்வை அடைவதற்கு காரணமாய் உள்ளதென்பதையும் முருகன் இல்லையேல் யோகமும் இல்லை, ஞானமும் இல்லை என்பதையும், முருகன் அருளை முழுமையாகப் பெற்றால் நாமும் மரணமிலாப் பெருவாழ்வை அடைதல் கூடும் … Read more
குரு உபதேசம் 4224
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : போலி வேடதாரிகளை பார்ப்பதே பாவம் என்று அறிகின்ற அறிவைப் பெறலாம். ஆகவே முருகப்பெருமான் ஆட்சிக்கு வந்தால், போலி வேடதாரிகள் கட்டுப்படுத்தப்படுவார்கள், பண்புள்ள சான்றோர்களுக்கு பாதுகாப்பு இருக்கும், உண்மை ஆன்மீகவாதிகள் நலம் பெறுவார்கள், பத்தினி பெண்டிர்கள், சான்றோர்கள், நலிந்த ஏழைகள் இவர்களுக்கு பாதுகாப்பு உண்டாகும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4223
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை மேற்கொள்கின்ற வைராக்கியமும், முருகப்பெருமான்தான் கடவுள் என்று அறிகின்ற அறிவும், அவனது ஆசியை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற வைராக்கியமும் முருகனது ஆசி பெற்றால்தான் முடியும் என்பதையும் அறிந்து முருகனது ஆசியை பெற்றால் எல்லாம் கூடும் என்பதையும் அறியலாம். பாலன் முருகன் பாதம் பணிந்திட காலனும் அஞ்சுவான் கண்டவர் கருத்தே. எந்தை கந்தன் இணையடி போற்றிட சிந்தையும் தெளியும் திடமாம் அறிவு. பன்முகமாக பரவும் சிந்தையை சண்முகன் திருவடி … Read more


