குரு உபதேசம் – 4176
முருகப்பெருமானை வணங்கிட: புண்ணியவான்கள்தான் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற முடியும் என்பதை அறியலாம். வாழும் கலையை வழங்கிய முருகனை நாளும் போற்றியே நலம் பெறுதல் நலமே! கனிவேலன் தந்த கனிவான தமிழை கனியாக்கி தருதல் கடனே! நஞ்சை அமுதாக்கிய நாயகன் முருகனை நெஞ்சில் நினைக்க நினைத்தவை சித்தியே!


