Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3821

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளைப் பூசிக்கும் அன்பர்கள் இக்கலியுகம் முடிந்து அமையும் ஞானிகள் ஆட்சியிலே ஆட்சி செய்யும் வாய்ப்பை பெறுவார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3820

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எல்லாம்வல்ல முருகப்பெருமான் தான் நம்மைக் காக்கும் வல்லமையுள்ள தெய்வம் என்றே முழுமையாய் ஏற்று முருகனது திருவடி பணிந்து ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர் உள்ள நாட்டிலும் அவர்தம் ஆட்சியிலும் பருவ மழை பொய்க்காது பெய்து நாடே செழிப்பாக இருக்கும். மக்கள் பண்புடையோராய் வாழ்ந்து நீதி நெறியுடைய ஆட்சியாய் அமைந்து மக்கள் மகிழ்ந்து திளைப்பர் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3816

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதர்களுக்குள் பிளவு உண்டாக்கி ஒருசிலர் ஆதாயம் அடையும்படியாக உருவாக்கப்பட்ட சாதி சங்கங்கள், மதச்சங்கங்கள் அனைத்தும் இல்லாமல் போய் எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாக எண்ணுமாறு பொது அமைப்புகளே உண்டாக்கப்படும். சாதிகளின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மதத்தையோ, சாதியையோ, குறிக்குமாறு உள்ளவற்றை எந்தவகையிலும் ஞானபண்டிதனின் ஞானிகள் ஆட்சி ஏற்காது “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனும் தாரக மந்திரமே உலகெங்கும் பின்பற்றப்படும்.