குரு உபதேசம் 4207
முருகப்பெருமானை வணங்கிட : சைவத்தில் நம்பிக்கையும், பக்தியில் நாட்டமும் உண்டாகி முருகனது ஆசியை பெற்று கடைத்தேற்றி கொள்ளலாம்.
முருகப்பெருமானை வணங்கிட : சைவத்தில் நம்பிக்கையும், பக்தியில் நாட்டமும் உண்டாகி முருகனது ஆசியை பெற்று கடைத்தேற்றி கொள்ளலாம்.
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : காமத்திற்குரிய காரணத்தை அறிந்து காமத்தை வெல்லுகின்ற உபாயமும் பெற்று மரணமிலாப் பெருவாழ்விற்குரிய மார்க்கத்தையும் பெறலாம் என்று அறியலாம். காமமே வாமமாக கண்டவன் ஞானி அடக்க அடக்க அடங்கா காமம் கடக்க கடக்க காட்டுவான் கந்தன்.
முருகன் திருவடியை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இருவினையையும் அறிந்து இடரையும் வெல்லக்கூடிய அறிவைப் பெறலாம். திருமூலர் திருவடியை தினமும் போற்றிட கருமூலம் கடக்க காட்டுமே உண்மை. திருமூலர் திருவடியை தினமும் போற்ற இருவினையும் இல்லை இடரும் இல்லையே. ஐய்யன் மூலன் அருளைப் போற்றவே வையகம் போற்ற வாழ்வது திண்ணமே. திண்ணிய மூலன் திருவடியைப் போற்றிட எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே. புண்ணிய மூலன் பொன்னடி போற்றிட நண்ணிய அனைத்தும் நல்கும் முக்தியே. முக்தியும் உண்டாம் முனையும் … Read more
முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : மும்மலத்தால் ஆன தேகத்தைப் பற்றி அறியவும், மும்மலக்கட்டினை உடைத்து வெற்றி காண்கின்ற அறிவை பெறலாம். முக்கண் மைந்தன் முருகன் திருவடியே பக்கத்துணை என்றே பகர்தல் நலமே. முத்தமிழ் வித்தகன் முருகன் அருளே சத்தும் சித்தும் கைவசம் ஆகுமே.
முருகப்பெருமான் திருவடியை பூஜித்து ஆசிபெற்றிட்டால் : ஞானமடைதற்கு காரணமாய் இருப்பது மும்மலக்குற்றமுள்ள இந்த மானுடதேகமே என்பதையும், இயற்கை தோற்றுவிக்கும் போதே மும்மலக் குற்றமுடையதாய் இந்த மானுட தேகத்தை தோற்றுவித்தது என்றும் ஆயினும் அந்த தேகத்தின் உதவியுடன் அதனுள் அமைந்துள்ள இரகசியத்தை புரிந்து கொண்டால், விடுபடுமாறு அமைப்பையும் வைத்துள்ளது என்றும் அது நெல்லினைப் போல தேக அடுக்கை வைத்து படைத்துள்ளதையும் தெரிந்து கொள்ளலாம். நெல்லின் மையப்பகுதி அரிசியாகவும் அதன் வெளிப்புறம் மெல்லிய தோல் போன்ற தவிடு என்ற உறையும், … Read more
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : இக வாழ்வாகிய இல்லற வாழ்வை செம்மையாக நடத்துவதற்கும், பரவாழ்வாகிய மோட்ச லாபத்தை அடைவதற்கும் முருகப்பெருமான் திருவடியினாலன்றி வேறெந்த வகையிலும் பெற முடியாது என்று அறியலாம். முக்கண் மைந்தன் முருகன் திருவடியே தக்க துணையென்றே சாற்றுதல் நலமே.
முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட்டால் : ஞானத்தலைவர் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற மக்களுக்கெல்லாம் ஞானவாழ்வு சித்திக்கும் என்பதை சத்தியமாக அறியலாம். சத்தியவான் நந்தனார் தாளிணை போற்றிட சித்தியும் உண்டாம், திடமாம் வாழ்வு. ஆற்றலாம் நந்தனார் அருளைப் போற்றிட ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். மாசற்ற நந்தனார் மலரடி போற்றவே ஆசற்ற வாழ்வும் அருளும் உண்டாம். வந்தித்தேன் நந்தனாரை வாழ்த்தினேன் சிந்தித்தேன் சித்தியும் பெற்றேனே. பாடுபெறும் நந்தனார் பாதம் பணிந்திட வீடுபேறு உண்டாம் விளம்பு. ஆற்றலாம் நந்தனார் அருளைப் போற்றவே … Read more
முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட : நரகமும், சொர்க்கமுமாக இருக்கின்ற இந்த உடம்பை அறிந்து தவமுயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பதே ஞான சித்தியாகும் என்று அறியலாம்.
முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட : சைவ உணவை கடைப்பிடிக்கவும், தூய மனதினை பெறவும், தயைசிந்தை பெற்று பெருகிடவும், பக்தி செலுத்திடவும் அருள் செய்து தவமுயற்சியினை மேற்கொள்ள செய்து முருகன் அருள் கூடிட தவத்தோன் ஆகிடலாம் என்பதை அறியலாம். ஒரு மனிதன் இகவாழ்வாகிய இல்லறம் சிறப்படைய சைவ உணவை கடைப்பிடித்தும், தூய மனதோடு தயைசிந்தையுடன் பக்தி செலுத்தினால்தான் இல்லறமும் சிறக்கும். இப்பண்புகளை தீவிரமாக கடைப்பிடித்தால்தான் துறவறமாகிய பரவாழ்வும் சிறக்கும். ஆதலினால் முருகன் அருளால்தான் ஒருவன் சைவ உணவை மேற்கொள்ளவும், … Read more