Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4399

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி செய்கின்ற பூஜைகளே சாகாக்கல்வியைத் தரும் என்றும் முருகனது திருவடிகளை மனமுருகி பூஜித்து பூஜித்து நிலையில்லாததையும் நிலையானவற்றையும் அறிந்து நிலையில்லாததை விட்டு விலகி நிலையான ஒன்றைப் பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வான், பாசமெனும் மயக்கத்தில் வீழ மாட்டான்.

குரு உபதேசம் 4398

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானயுகமான ஞானசித்தர்கள் ஆட்சியிலே ஞானிகளின் மூத்த தலைவனும், முதல்வனுமான ஞானபண்டிதனே நேரில் அவதாரமாக தோன்றி அருள்பாலிப்பதை அறிந்து கொள்வதோடு ஞான ஆட்சி காலமதிலே பண்புடையோர், பத்தினி பெண்கள், ஆதரவற்றோர், பஞ்சபராரிகள் என அனைவரும் ஞானவான் முருகனாலும் சித்தர்களாலும் காக்கப்படுவார்கள் என்பதையும் அராஜகம் செய்வோர், பொது சொத்தை அபகரிப்போர், லஞ்சம் வாங்குவோர், கலப்படம் செய்வோர், வஞ்சனை செய்வோர், நீதிக்கு புறம்பாக நடப்பதும், தீமைகள் புரிகின்ற அனைவரும் ஞானிகளால் கட்டுப்படுத்தப்பட்டு இவ்வுலகம் … Read more

குரு உபதேசம் 4397

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பண்புடையவர்களது நட்பு அமையும், நல்ல சூழ்நிலையில் வீடு அமையும், பண்புள்ள மனைவியும், பண்புள்ள புத்திரபாக்கியமும் ஏற்படும், பண்புடைய சுற்றமும் உண்டாகி, எதையும் ஆழ்ந்து சிந்திக்கின்ற அறிவும், ஞானத்திற்குரிய பரிபக்குவமும் உண்டாகி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கான தக்க சூழ்நிலையும், சற்குரு, சொற்குருவின் தொடர்பும், ஆசியையும் பெறுகின்ற அற்புதமான வாய்ப்பும் அமையப் பெறுவார்கள்.

குரு உபதேசம் 4396

முருகப்பெருமான் ஆசி பெற்றிட்டால்…. ஆறறிவு உள்ள மனிதர்கள் முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்று முருகப்பெருமானை பூஜிக்கின்றவர்களுக்கு ஏதேனும் இடையூறு வந்திட்டால் அக்கணமே தோன்றி இடையூறு நீக்கி அருள் செய்வான் என்று அறியலாம். …………….. வல்லவன் வேலவன் வருகையால் உலகினிலே எல்லோரும் வாழ்வார் இனிதே! மூவர்க்கும் தேவர்க்கும் முதல்வன் முருகனே யாவரும் நலம் தரவே வருவான் திண்ணமே!

குரு உபதேசம் 4395

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இகவாழ்வும் சித்திக்கும், பரவாழ்வும் சித்திக்கும், அதுமட்டுமன்றி இகவாழ்விற்கும் பரவாழ்விற்கும் அப்பாற்பட்டதான ஐந்தொழில் புரியும் வல்லமை பெற்றதான, தோன்றி மறையக்கூடிய வல்லமை பெற்ற ஒளிதேகத்தை உடையதுமான பிரம்மநிலை வாழ்வையும் பெறலாம். …………….. வற்றா கருணை வழங்கும் முருகனை சற்றேனும் பூசிக்க தானவனாமே!

குரு உபதேசம் 4394

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. வினைக்குரிய காரணத்தை அறியச் செய்தும், வினைக்குரிய காரணத்தை உணரச்செய்தும் மீண்டும் வினை சூழாதிருக்க தேவையான வாய்ப்பையும், வினையை அனுபவிக்க செய்தும், வினையிலிருந்து மீட்கவும் செய்கிறான் முருகப்பெருமான். …………….. வினைகள் அனைத்தும் கடந்த வேலவன் திருவடியை துணையென்றே போற்றுவோம் துணிந்தே.