admin
குரு உபதேசம் – 4188
முருகனை வணங்கிட: மும்மலக் குற்றத்தாலான தேகமே தொடர் பிறவிக்கு காரணமாய் உள்ளதை அறிந்து முதன் முதலில் மும்மலக்குற்றத்தை நீக்கிக் கொண்டு ஒளிதேகம் பெற்றவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். பற்றற்ற முருகனின் பாதம் பணிந்திட குற்றமற்ற வாழ்வும் நற்குணமும் உண்டாம்.
குரு உபதேசம் – 4187
முருகனை வணங்கிட: முருகனே சத்தும் சித்துமாக இருப்பதை அறியலாம். வித்தகன் முருகனடியை விரும்பியே போற்றிட சத்தும் சித்தும் கைவசமாமே. இடைபின் கலைநடுவில் இயங்கிடும் சுழிமுனையை தடையற கண்டிட தான் அவனாமே.
குரு உபதேசம் – 4186
முருகப்பெருமானை வணங்கிட: கொடுக்கக் கூடிய மனமும் அதற்குரிய வாய்ப்பையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளக்கூடிய அறிவையும் முருகப்பெருமான்தான் அருள்வான் என்பதையும் அறியலாம். பாடுபெறும் திருவடியை பணிந்தே பூசிக்க வீடுபேறு உண்டாம் விளம்பு.
குரு உபதேசம் – 4185
முருகப்பெருமானை வணங்கிட: முக்திக்கு வித்தான செம்பொருளை மறைத்த காமதேகத்தை வென்றவன் தான் முருகப்பெருமான் என்று அறியலாம். முப்பூவை அறியலாம் முனையும் திறந்திடும் தப்பின்றி பூஜைகள் தானே செய்திட.
குரு உபதேசம் – 4184
முருகப்பெருமானை வணங்கிட: யோகத்துக்கும், ஞானத்திற்கும் தலைவன் முருகப்பெருமானே. முருகப்பெருமான் அன்றி, மனிதர்கள் வாசி நடத்தி கொடுப்பது என்பதெல்லாம் வெறும் பொய்யென்றும், ஏமாற்று வேலை என்றும், அவர்களை முருகப்பெருமான் தண்டிப்பார் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 4183
முருகப்பெருமானை வணங்கிட: உணவில், உடலில், உணர்வில், உணர்ச்சியில், புலனில் சைவத்தை கடைப்பிடிக்கக்கூடிய வல்லமையை பெறலாம் என்று அறியலாம். புலனைந்தும் வென்ற புண்ணியன் முருகனை நலம் பெறவே போற்றுவோம் நாளும் துதித்தே சத்தியவான் முருகனின் தாளிணை போற்றியே நித்திய வாழ்வு நிலைக்கும் உண்மையே. சத்தியமே முருகன் முருகனே சத்தியம்
குரு உபதேசம் – 4182
முருகப்பெருமானை வணங்கிட: தயை குணம்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதை அறியலாம். சீலமாம் முருகனின் திருவடி போற்றிட காலத்தை வெல்ல கருத்தும் தோன்றுமே. சீலமாம் முருகனின் திருவடி போற்றிட தூல சூட்சுமம் கைவசமாமே.
குரு உபதேசம் – 4181
முருகப்பெருமானை வணங்கிட: எந்தெந்த வகையில் தொடர் பிறவி ஏற்படும் என்றும், அதற்கு காரணம் என்ன என்பதையும் அறிந்து நீக்கிக் கொள்ளலாம். நிலையில்லாத உடம்பை பெற்ற நாம் முருகன் அருளால் நிலையில்லாத உடம்பை நிலையான உடம்பாக உறுதிப்படுத்திக் கொள்ளும் வழியை அறியலாம். முருகப்பெருமான் திருவடியே வேதம் என்றும், அவன் நாமஜெபமே தவம் என்றும், அவனது நாமமே மந்திரம் என்றும், அவனது ஆசிபெறுவதே சிறப்பறிவு என்றும், அதில் வெற்றி பெறுவதே ஞானம் என்றும் அறிந்து கொள்ளலாம். காரண குருவான கந்தனைப் … Read more


