Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4332

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பண்புள்ள மக்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்து ஆட்சி செய்வார்கள், நாடு நலம் பெற்று, இயற்கை வளம் மிகுந்து நாடு சுபிட்சம் அடையும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4331

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பல ஜென்மங்களிலே பாவங்கள் செய்து ஊழ்வினை மிகுந்துள்ளவர்களே தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்வார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4330

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : வருகின்ற காலங்களிலே தமிழ் கடவுள் முருகப்பெருமானாரின் தலைமையிலே இவ்வுலகெங்கும் ஞானசித்தர்கள் ஆட்சி அமையப்போவதினாலே, தமிழ் கடவுள் தோற்றுவித்த தமிழ் மொழி கற்றவர்க்கே முதலிடம் அளிக்கப்பட்டு தலைவனாம் முருகப்பெருமானின் அன்பிற்கும் அருளிற்கும் பாத்திரமாவார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4329

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சாதாரண மனிதனுக்கு அவனுள் இருக்கின்ற சத்தையும், அசத்தையும் பற்றி அணுவளவும் தெரியாது. முருகப்பெருமானின் தயவையும், அருளையும், ஆசியையும் பெற்றாலன்றி சத்தைப் பற்றியோ, அசத்தைப் பற்றியோ அறிய முடியாது. முருகனது அருளைப் பெற பெற, சத்தையும் அசத்தையும் பற்றி அறியலாம். முருகனது அருளைப் பெற பெற அவனது அருள்பலம் கூடிட சத்தையும் அசத்தையும் பிரிக்கின்ற உபாயமதனை பெறுவது எப்படி? என்பதை அறியலாம். ஆதி ஞானத்தலைவனே அச்சீடன்பால் மனமிரங்கி சீடனது காமதேகத்தினுள் … Read more

குரு உபதேசம் 4328

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பொறாமை குணம் நீங்கும், பேராசை நீங்கும், கோபம் கட்டுப்படும், “யான்” என்ற கர்வம் நீங்கும் இவையெல்லாம் நம்மை விட்டு நீங்கி முருகனருளால் தயை சிந்தை உண்டாகும். குணக்கேடுகளற்ற முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜை செய்கின்ற மக்களுக்கு எந்த குணக்கேடுகளும் வராது. ……………… அற்புத முருகனின் அருளினை போற்ற கற்பதே கல்விக்கு அழகு.

குரு உபதேசம் 4327

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், ஞானிகளுக்கும் அருள்செய்து காத்து இரட்சித்த முருகப்பெருமான் நமக்கும் அருள்செய்வான் என்பதை அறியலாம். பெருந்தயவு கருணைத்தாய் தன்னிகரில்லா முருகப்பெருமானின் தயவை பெற விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டால்தான் முடியும் என்பதையும் உயிர்க்கொலை செய்த பாவம் நீக்கி பின் தினமும் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் முருகா” … Read more

குரு உபதேசம் 4326

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பக்திக்கு தலைவன் முருகப்பெருமான்தான் என்றும், முருகனது ஆசியை பெறுவதே ஜென்மத்தைக் கடைத்தேற்ற துணை என்பதையும் அறியலாம். …………….. அருமையாம் முருகனின் அருளினை போற்றவே இருமைக்கு துணையென்றே இயம்புவர் நல்லோர். நல்லவர்கள் போற்றும் நாயகன் முருகனை எல்லோரும் போற்றிட இன்பமாம்.

குரு உபதேசம் 4325

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : வருகின்ற ஞானசித்தர் காலத்தினிலே இவ்வுலகை வழிநடத்தி ஞானசித்தர்கள் ஆட்சியை தலைமையேற்று வழி நடத்துவது ஞானத்தலைவன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம். ஞானசித்தர்கள் ஆட்சியிலே மக்கள் தொண்டினை சீர்சிறப்பாய் செய்திட முக்கியமான பதவிகளிலே அமர்ந்து உலகை வழி நடத்த வாய்ப்புகளை முருகனது திருவருளால் பெறலாம் என்பதையும் அறியலாம். ……………… பக்குவம் மிக்கதொரு பாலமுருகனை தக்க துணையென்றே சாற்றுவர் நல்லோர்.

குரு உபதேசம் 4324

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானிகள் நாமங்களை சொல்லி பூஜித்து ஆசி பெறுகின்ற மக்களுக்கு முருகனருளால் உணவு, உடை, தங்குமிடம் மற்றும் தகுதியுள்ள நட்பும் அமையப்பெற்று நலமான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4323

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முற்றுப்பெற்ற ஞானிகள் ஆட்சியான ஞானசித்தர்கள் ஆட்சி காலத்திலே உலகத்தினில் ஏற்படுகின்ற ஞானியர் ஆட்சியானது ஜீவதயவினை அடிப்படையாக கொண்டதையும், அதன் ஒட்டுமொத்த தலைமை பொறுப்பை ஏற்று இவ்வுலகையே ஜீவதயவின் வழி, நடத்தி ஞானசித்தர் ஆட்சிக்கு தலைவனாக விளங்கி நிற்பவன், ஜீவதயவே வடிவானவரும் சதகோடி சூரியபிரகாசமுள்ள அருட்பெருஞ்ஜோதி வடிவான சரவணஜோதி சொரூபனான ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமான் என்பதையும் அறியலாம். அவனே தனது சொரூப நிலையினை அமைப்பாக்கி சரவணஜோதி அமைப்பை உருவாக்கி தலைவனாகி … Read more