குரு உபதேசம் – 3576
முருகனை என்றால், அகத்தீசனை பூஜை செய்து ஆசி பெறுபவர்க்கே ஞானசித்தர் காலத்தில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3575
முருகனை வணங்கிட, ஞானிகள் அத்துணைபேரும் நரை, திரை, மூப்பு, பிணி, மரணத்தை வென்றவர்கள் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3574
முருகனை வணங்கிட, வறுமையில்லா வாழ்வும், புலால் உண்ணாத வாழ்வும், நோயற்ற வாழ்வும், மதுவற்ற வாழ்வும் அமைந்து முருகன் அருள் கூடி குணக்கேடுகளெல்லாம் நீங்கி பண்புள்ள, பக்தியுள்ள வாழ்வு அமையும்.
குரு உபதேசம் – 3573
முருகா என்றால், பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அதை நீக்கவும், அதற்குரிய வாய்ப்பினைப் பெற்றும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். பிற உயிர்கள் படுகின்ற துன்பங்களைக் கண்டு மனமிரங்கி, அவ்வுயிர் படுகின்ற துன்பத்தை உணர்ந்து, அவ்வுயிரின் துன்பத்திலிருந்து அவ்வுயிரை காப்பாற்றி அவ்வுயிர்களை மகிழ்வித்து வாழ வைப்பதே தவம் என்பதை அறியலாம். இப்படிப்பட்ட தவமே ஜீவதயவாகும். ஜீவதயவு பெருக பெருக மனிதனாய் பிறந்து மிருகமாய் வாழ்கின்றவன்கூட, மிருகாதி தன்மையை இழந்து மனிதன் மனிதனாவான். மனிதனாகிய மனிதன் ஜீவதயவு பெருக … Read more