குரு உபதேசம் – 3572
முருகா என்றால், அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றைப் பற்றி அறியச் செய்து, அதற்குரிய அறிவையும் தந்து, வைராக்கியமும் அளித்து நம்மை நிலை உயரச் செய்வான் முருகன் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3571
முருகா என்றால், சிந்தையும் தூய்மையாகும், சொல்லும் தூய்மையாகும், செயலும் தூய்மையாகும், மற்றைய அனைத்தும் தூய்மையாகி முருகனது ஆசியைப் பெறலாம்.
குரு உபதேசம் – 3570
முருகா என்றால், சைவ உணவில் நம்பிக்கையும், உயிர்க்கொலை செய்வதால் வருகின்ற பாவத்தையும் முழுமையாக உணர்ந்து, உயிர்க்கொலை செய்து உண்கின்ற பாவத்திலிருந்து விடுபடுவதோடு, ஏற்கனவே செய்த பாவங்களிலிருந்து விடுபட, உயிர்களுக்கு இரங்கி இதம் புரிந்து ஜீவதயவை பெருக்கி முன்ஜென்ம பாவங்களிலிருந்து விடுபடும் வாய்ப்பையும் பெறுவான். நம்பிய தொண்டன் வேண்டுகோளை ஏற்று பெருங்கருணை கொண்டு முருகன் முன்னிறங்கி எந்த உயிர்களை கொன்று பாவியானோமோ அந்த உயிர்கள் வாழ்வதற்கு ஆதரவளித்து தொண்டுகள் செய்து பிற உயிர்களது ஆசியைப் பெற்று உயிர்களின் சாபங்களிலிருந்து … Read more