குரு உபதேசம் – 3559
முருகனை வணங்கிட, மனிதனாக உள்ளவனுக்கு பலவித துன்பங்கள் இருந்தபோதும், பசித்துன்பமே மனிதனை உடனே நலியச் செய்யக்கூடிய தீராத பெருந்துன்பம் என்பதை அறிகின்ற சிறப்பறிவு உண்டாகும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3558
முருகனை வணங்கிட, அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றுகின்ற அறிவைப் பெறலாம். ஜென்மத்தைக் கடைத்தேற்றிட கசடான தேகமதை முருகன் ஆசி பெற்று உணர்ந்திடவும், அறிவு ஏற்பட்டு பாவமும் புண்ணியமும் கலந்ததே உடம்பும் என்பதையும் பாவமாகிய களங்கம் நீங்கும் போது புண்ணியமாகிய ஒளி உடம்பை பெறலாம் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3557
முருகனை வணங்கிட, நரை, திரை, மூப்பு, பிணிக்கு ஆட்பட்ட உடம்பை மாற்றி என்றும் அழிவிலாத ஒளி உடம்பைப் பெற்று மரணமிலாத வாழ்வை வாழலாம் என்று அறியலாம்.