குரு உபதேசம் – 3553
முருகனை வணங்கிட, மகான் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம், மகான் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம், மகான் ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் போன்ற ஜென்மத்தைக் கடைத்தேற்றவல்ல ஞான நூல்களை படித்து கடைத்தேறும் வாய்ப்பை பெறலாம் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3552
முருகனை வணங்கிட, பரு உடம்பாகிய புற உடம்பின் துணைகொண்டே நுண்ணுடம்பாகிய ஒளி உடம்பை பெறலாம் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3551
முருகனை வணங்கிட, சிந்தை, செயல், சொல் ஆகியவை மாசுபடுவதற்கு காரணம் உடல்மாசுதான் என்றும், உடல் மாசு நீங்கினால் சிந்தை, செயல், சொல் ஆகியவையும் தூய்மையாகும் என்பதையும் அறியலாம்.