குரு உபதேசம் – 3543
முருகனை வணங்கிட, அகத்தியம் பெருமானாருக்கு அருள் செய்து ஒளி தேகத்தை அளித்து மரணமிலாப் பெருவாழ்வை அளித்து, அருள் செய்து காத்ததைப் போல, நாம் முருகனை வணங்க வணங்க, முருகனும் நம்மீது கருணை கொண்டு ஒரு கால பரியந்தத்திலே நமக்கும் அருள் செய்து நம்மையும் அருள் பார்வைக்கு உள்ளாக்கி, அகத்தியருக்கு அருளியது போல நம்மையும் சார்ந்து வழிநடத்தி மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்வான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3542
முருகனை வணங்கிட, பிற உயிர்களுக்கு செய்கின்ற நன்மையே, நமது ஆன்மாவிற்கு ஆக்கம் தரும் என்பதை அறியலாம். ஆன்ம ஆக்கம் கூடிட கூடிட அறிவும், மென்மையாக மாறி சிறப்பறிவாக மாறிடும். இதை முருகப்பெருமான் அருளினால் பெறலாம் என்பதையும் அறிந்து, ஜீவதயவின் வழி ஆன்மாவை ஆக்கப்படுத்தி சிறப்பறிவையும் பெறலாம்.
குரு உபதேசம் – 3541
முருகனை வணங்கிட, உணவு, உடை, தங்கும் வசதி, பொருளாதாரம், தொண்டர் படையையும் தருவதோடு மட்டுமல்லாமல், தவத்திற்குரிய அறிவையும், அதற்குரிய சூழ்நிலையையும் அமைத்து தந்து, அந்த தவ முயற்சியுடையோரை சார்ந்து வழி நடத்தி சென்று, அவர் தம்மை வாசி வசப்படச் செய்து வாசி நடத்திக் கொடுத்து காயசித்தி செய்திட தேவையான மூலிகைகள், கற்பங்கள் என அனைத்தையும் தந்து காய சுத்தி செய்து, தவசியை தவம் முடிக்க செய்து, வாசியில் வெற்றி பெறச் செய்து அவனையும் தன்னைப் போல ஆக்கிக் … Read more