குரு உபதேசம் – 3540
முருகனை வணங்கிட, பால பருவம், வாலிப பருவம், முதுமைப் பருவம் ஆகிய மூன்று நிலைகளும் உண்டாகி, இறுதியில் அனைத்தும் அழிந்து போவதும், இயற்கையால் வந்தது என்றும், இயற்கையால் விதிக்கப்பட்ட இந்த பருவங்களை கடந்து மாற்றி, என்றும் மாறாத அழிவில்லாத இளமைப் பருவத்தை அடையலாம் என்பதையும், அதுவே மரணமிலாப் பெருவாழ்வாகிய பெருநிலை என்பதையும், அதை தவ முயற்சியால், தயவின் துணையால் அடையலாம் என்பதையும் முதன் முதலில் முருகப்பெருமான் தான், இத்தவத்தை கண்டு பிடித்தார் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3539
முருகனை வணங்கிட, தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அவனது குடும்பமே பெருமைக்குரிய குடும்பமாக மாறும்.
குரு உபதேசம் – 3538
முருகனை வணங்கிட, முக்காலமும் உணர்ந்த முனிவன் அகத்தீசனை பூஜை செய்திட செய்திட, நாமும் எதிர்காலத்தை சிந்தித்து செயல்பட்டு நற்கதியை பெறலாம் என்று அறியலாம்.