குரு உபதேசம் – 3525
முருகனை வணங்கிட, உயிர்களுக்கு நன்மை செய்கின்ற அறிவையும் வாய்ப்பையும் பெறுவதோடு, உயிர்கள் மகிழ்வினிலே ஆசியையும் பெற்றிட வழிவகைகளையும் பெற்று உயிர்களிடத்து ஆசியையும் பெறலாம்.
முருகனை வணங்கிட, உயிர்களுக்கு நன்மை செய்கின்ற அறிவையும் வாய்ப்பையும் பெறுவதோடு, உயிர்கள் மகிழ்வினிலே ஆசியையும் பெற்றிட வழிவகைகளையும் பெற்று உயிர்களிடத்து ஆசியையும் பெறலாம்.
முருகனை வணங்கிட, அகத்தீசன் முதல் அனைத்து சித்தர்களுக்கும் ஆசான் முருகப்பெருமான்தான் தலைவன் என்று அறிகின்ற அறிவைப் பெறலாம்.
முருகனை வணங்கிட, இகவாழ்வாகிய இல்லறத்திற்கும், பரவாழ்வாகிய ஞானத்திற்கும் ஆதி ஞானத்தலைவன், ஞானபண்டிதன் முருகப்பெருமானைத் தவிர வேறு யாரும் துணை இல்லை என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட ,சைவ உணவை கடைப்பிடித்து, அன்னதானம் செய்து, ஞானிகளை பூஜித்து ஆசிபெற்று நாள்நாளும் பெருகுகின்ற வளர்பிறை போன்ற சிறப்பு அறிவை பெறலாம்.