குரு உபதேசம் – 3512
முருகனை வணங்கிட, ஞானத்தலைவர் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற மக்களுக்கெல்லாம், ஞானவாழ்வு சித்திக்கும் என்பதை சத்தியமாக அறியலாம்.
குரு உபதேசம் – 3511
முருகனை வணங்கிட, நரகமும், சொர்க்கமுமாக இருக்கின்ற இந்த உடம்பை அறிந்து, தவமுயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பதே ஞான சித்தியாகும் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3510
முருகனை வணங்கிட, சைவ உணவும், தூய மனமும், தயை சிந்தையும், பக்தியும் தவமுயற்சிக்கு அடிப்படை ஆதாரம் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3509
முருகனை வணங்கிட, பாலையும் நீரையும் பிரித்தெடுக்கும் அன்னப்பட்சியைப் போல் தூலதேகத்தின் மாசை நீக்கியும், சூட்சும தேகத்தை ஒளி பெறச் செய்தும் என்றும் அழிவிலாத ஒளி உடம்பை பெறலாம் என்று அறியலாம்.