குரு உபதேசம் – 3499
முருகனை வணங்கிட, மும்மலக் குற்றத்தாலான தேகமே தொடர் பிறவிக்கு காரணமாய் உள்ளதை அறிந்து முதன் முதலில் மும்மலக்குற்றத்தை நீக்கிக் கொண்டு ஒளிதேகம் பெற்றவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3498
முருகனை வணங்கிட, உயர் பிறப்பாகிய மனித தேகம் பெற்றவர்கள், இளமை இருக்கும்போதே தக்க ஆசானைத் தேடி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவை பெறலாம்.
குரு உபதேசம் – 3497
முருகனை வணங்கிட, முருகனே சத்தும் சித்துமாக இருப்பதை அறியலாம்.