குரு உபதேசம் – 3492
முருகனை வணங்கிட, உணவில், உடலில், உணர்வில், உணர்ச்சியில், புலனில் சைவத்தை கடைப்பிடிக்கக்கூடிய வல்லமையை பெறலாம் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3491
முருகனை வணங்கிட, தயை குணம்தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3490
முருகனை வணங்கிட, எந்தெந்த வகையில் தொடர் பிறவி ஏற்படும் என்றும், அதற்கு காரணம் என்ன என்பதையும் அறிந்து நீக்கிக் கொள்ளலாம். நிலையில்லாத உடம்பை பெற்ற நாம் முருகன் அருளால் நிலையில்லாத உடம்பை நிலையான உடம்பாக உறுதிப்படுத்திக் கொள்ளும் வழியை அறியலாம். முருகப்பெருமான் திருவடியே வேதம் என்றும், அவன் நாமஜெபமே தவம் என்றும், அவனது நாமமே மந்திரம் என்றும், அவனது ஆசிபெறுவதே சிறப்பறிவு என்றும், அதில் வெற்றி பெறுவதே ஞானம் என்றும் அறிந்து கொள்ளலாம்.