குரு உபதேசம் – 3483
முருகனை வணங்கிட, மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்களை உணரச் செய்தும், மீண்டும் அதுபோன்ற குற்றங்கள் ஏற்படாவண்ணம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறிவைப் பெறலாம்.
முருகனை வணங்கிட, மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்களை உணரச் செய்தும், மீண்டும் அதுபோன்ற குற்றங்கள் ஏற்படாவண்ணம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறிவைப் பெறலாம்.
முருகனை வணங்கிட, பெறுதற்கரிய மானுடதேகம் பெற்றவர்கள்தான் பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அவ்வுயிர்களுக்கு உதவி செய்து, அவ்வுயிர்படும் துன்பத்தை நீக்குகின்ற வல்லமையையும் பெற்றது என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட, என்றும் நிலைப்பெற்று அருளுகின்ற முருகப்பெருமான் திருவடியே உண்மை என்று அறியலாம்.
முருகனை வணங்கிட, உலகத்தில் அதர்மம் மிகுதியாகும் போதெல்லாம் ஞானத்தலைவன் முருகப்பெருமானே விஷ்ணுபகவானாகவும், அகத்தியராகவும், அவதாரங்களாகவும் தோன்றி அதர்மத்தை அழித்து நீதியை நிலை நாட்டினான் என்பதை அறியலாம்.