குரு உபதேசம் – 3473
தயவே வடிவான முருகப்பெருமான் ஆசியை பெற விரும்புகிறவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு, மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும், காலை பத்து நிமிடமும், மாலையில் பத்து நிமிடமும் முடிந்தால், இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ மகாமந்திரங்களை ஜெபித்து வர வேண்டும். முருகப்பெருமான் மனமிரங்கி அருள்செய்யும் வரை, விடாது சலிப்பின்றி, சோர்வடையாமல் முன் … Read more
குரு உபதேசம் – 3472
முருகனை வணங்கிட, புண்ணியவான்களுக்கெல்லாம் புண்ணியவான்களாக உள்ள, புண்ணியவான்களுக்கெல்லாம் புண்ணியவானாகி நிற்கின்ற, புண்ணியவான்களுக்கெல்லாம் புண்ணியவானாகிய, மேம்பட்ட புண்ணியவானாய் நிற்கும் முருகப்பெருமான் திருவடியை பூசித்தால்தான், அரிதினும் அரிதாய் உள்ள மெய்ப்பொருளை அறியலாம்.
குரு உபதேசம் – 3471
முருகனை வணங்கிட, முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியையும், நாற்பத்து எட்டாயிரம் ரிஷிமார்களின் ஆசியையும், அஷ்ட திக்கு பாலகர்களின் ஆசியையும், தேவாதி தேவர்கள் ஆசியையும், தேவதைகளின் ஆசியையும், நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியையும் ஒருங்கே பெற்றுக் கொள்ளலாம் என்று அறியலாம்.