குரு உபதேசம் – 3460
முருகனை வணங்கிட, ஒன்பது கோடி மனிதர்களை ஞானிகளாக்கிய அகத்தீசன் திருவடிகளை பூசிப்பதே சிறந்த பக்தியாகும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3459
முருகனை வணங்கிட, நிலையில்லாததை நிலையென்று நம்பி மயங்குகின்ற மயக்கம் நீங்கி, எது நிலையானது, எது நிலையற்றது என்பதை உணருகின்ற தெளிவான அறிவைப் பெற்று, அந்த நிலையான ஒன்றை அடையும் மார்க்கம்தனை உணர்த்துவான் முருகப்பெருமான்
குரு உபதேசம் – 3458
முருகனை வணங்கிட, ஞானம் என்ற சொல்லே முருகப்பெருமானால்தான் வந்தது என்பதை அறிந்தும், ஞானத்தின் தலைவன் ஞானம் அளிப்பவனும் முருகனே என அறியலாம்.