குரு உபதேசம் – 3457
முருகனை வணங்கிட, மக்களை வழிநடத்தவல்ல சமூக சான்றோர்க்கும், மக்களை கடைத்தேற்றிடவல்ல, நெறி உரைத்து இம்மை மறுமைக்கு உபாயமளிக்கும் ஆன்மீக சான்றோர்க்கும், அருள் செய்யும் வல்லமை ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானுக்கே உண்டு என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3456
முருகா என்றால், தன்னை அறிந்து தகைமை பெற தமிழே துணை என்பதை அறியலாம். என்றும் இளமையாக மரணமற்று முருகப்பெருமான் இருப்பது போலவே, முருகனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழும் என்றும் இளமையாகவே இருப்பதையும், என்றும் அழியாமலும் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம். தமிழ் ஞானமொழியாகும். உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள விரும்பினால், தமிழைக் கற்றால் அன்றி வேறு மார்க்கமில்லை. தமிழ் மொழி மட்டுமே உடம்பையும், உயிரையும் பற்றி விளக்கி மரணமிலாப் பெருவாழ்வை அடைய உதவும் மொழியாகும். வேறெந்த … Read more
குரு உபதேசம் – 3455
முருகனை வணங்கிட, செய்கின்ற செயல்கள் அனைத்தும் பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணக்கூடிய செயல்களாகவே அமைவதை அறியலாம். முற்றும் உணர்ந்த முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெறுவதனாலே, நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தும் பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்ற செயல்களாகவே அமையும்.