குரு உபதேசம் – 3425
முருகப்பெருமான் ஆசிபெற நினைப்பதே உண்மையான அறிவாகும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3424
முருகா என்றால், உலக நன்மைக்காக அமைக்கப்பட்ட இந்த ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்திற்கு தொடர்ந்து தொண்டு செய்கின்ற வாய்ப்பை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
குரு உபதேசம் – 3423
முருகா என்றால், நம்மிடம் என்னென்ன குணக்கேடுகள் உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும், அதை அறிந்து நீக்கிக் கொள்ளவும், நீக்கும் வழிமுறையையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3422
உடம்பாகிய சந்திரகலையையும், உயிராகிய சூரியகலையையும், அக்னி கலையாகிய சுழிமுனையையும் அறியச் செய்து, அவனே நம்முள் சார்ந்து முக்கலைகளையும் இயக்கி நமது புருவ மத்தியாகிய சுழிமுனையில் ஒடுங்கிவிடுவான். முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு காமம், கோபம், பொறாமை, பேராசை, வன்மனம் போன்ற குணக்கேடுகளே தடையாய் இருக்கும். முருகனது ஆசியைப் பெறபெற, தடையாய் உள்ள குணக்கேடுகளெல்லாம் முருகனருளால் நம்மிடமிருந்து நீங்கி அவனருளாலே அவன்தாள் வணங்கும் வாய்ப்பை பெற்று முழுமை பெறலாம்.