குரு உபதேசம் – 3419
முன் செய்த வினைகள் காரணமாக வறுமை, நோய், பிணி, பகை இன்னும் அநேக துன்பங்கள் வந்தாலும் அதை முருகப்பெருமானின் ஆசியால் வெல்லலாம் என்று அறியலாம்.
முன் செய்த வினைகள் காரணமாக வறுமை, நோய், பிணி, பகை இன்னும் அநேக துன்பங்கள் வந்தாலும் அதை முருகப்பெருமானின் ஆசியால் வெல்லலாம் என்று அறியலாம்.
முருகா என்றால், வெல்லற்கரிய மாமாயை வென்று வெற்றிகண்ட வேல்முருகனைப் போற்றி துதித்து வாழ்வதே சிறப்பறிவாகும் என்பதை அறியலாம்.
முருகா என்றால், முதன் முதலில் காமதேகத்தை வென்று ஒளி உடம்பைப் பெற்ற மாவீரன் முருகப்பெருமான் என்று அறியலாம். முருகப்பெருமானின் ஆசிபெற்ற மக்களுக்கு, காமதேகம் நீங்கி ஒளிதேகம் பெற்று என்றும் அழிவிலாத மரணமிலாப் பெருவாழ்வைப் பெறலாம் என்றும் அறியலாம்.
முருகா என்றால், வறுமை தீரும், பகை தீரும், நோயற்ற வாழ்வும், உடல் ஆரோக்கியமும் உண்டாகும். பொல்லாத காம தேகத்தின் சீற்றம் மெல்லமெல்ல குறையும், ஞானமென்பதே முருகன் திருவடிதான், முருகன் திருவடியை பூசிக்க பூசிக்கத்தான் மனம் செம்மைப்பட்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். ஞானம் என்றால் அறிவாகும். அந்த அறிவு பிறப்பின் இரகசியத்தை அறிந்து பிறப்பையும் இறப்பையும் வெல்லுவதாக அமைவதே ஞானமாகும்.