குரு உபதேசம் – 3396
பசி நோய், காம நோய், கோப நோய், பொறாமை நோய், முதுமை நோய், ஈளை இருமல் நோய், நிலையில்லாத உடம்பை நிலையென்று நம்புகின்ற நோய், நிலையற்ற பொருளை நிலையானதென்று நம்புகின்ற நோய், கணக்கிலடங்கா கற்பனை நோய், இன்னும் அநேகம் அநேகம் நோய்களையெல்லாம் நீக்கி, நோய்க்கு காரணம் உணர்த்தி, நமக்கு முருகனே குருவாய் நம்முள் அமர்ந்து நோய் நீக்கி, நோய் வரும் வழி நீக்கி தூய்மைப்படுத்தி ஞானம் அருளி மரணமிலாப் பெருவாழ்வையும் அருளி காத்து நம்மை கடைத்தேற்றி அருள்வான் … Read more
குரு உபதேசம் – 3395
அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கையும் அறிந்து அடையக்கூடிய வாய்ப்பை பெறலாம்.
குரு உபதேசம் – 3394
முருகப்பெருமானே முற்றுப்பெற்ற முனிவன் என்றும், நம்மை காத்து இரட்சிக்க கூடிய கடவுள் என்றும் அறிகின்ற அறிவைப் பெறலாம்.
குரு உபதேசம் – 3393
மனித வர்க்கம், சிந்திக்கவும் செய்ய முடியாத மிகப்பெரிய தவத்தை செய்து, காமதேகத்தை நீர்த்து ஒளிதேகம் பெற்ற முருகப்பெருமான் திருவடியை பூசித்து ஆசிபெற நினைப்பதுவே சிறந்த அறிவாகும். முருகப்பெருமான் உலக நலம் கருதியே அவதரித்த முதுபெரும் ஞானியும், கடவுளும் ஆவான். முருகா என்று சொல்லுகின்ற அத்தனைபேரும் எத்தகைய பாவம் செய்திருந்த போதிலும் சரி, அத்தனை பாவங்களும் நீங்கி தன்னைப் பற்றி அறியக் கூடிய சிறப்பு அறிவு உண்டாகும். முருகன் திருவடியை பூசிக்காதவனுக்கு முக்தி இல்லை, இல்லை என்பது சத்தியமாகும்.