குரு உபதேசம் – 3392
மும்மலமாகிய சிறையில் ஆன்மா அகப்பட்டதை அறிந்து, அந்த சிறையிலிருந்து விடுபட்ட முதல் தலைவன் முருகப்பெருமான்தான் என்பதை அறிந்து, முருகப்பெருமானின் திருவடியைப் பற்றி பூசித்து ஆசி பெற்றாலன்றி மும்மல சிறையில் அகப்பட்ட ஆன்மாவை விடுவிக்க முடியாது என்பதை உறுதியாக நம்பி தெளிவடைய வேண்டும். இந்த தெளிவை பெறுவதே சிறப்பறிவாகும். இதை கற்பதே சாகாக்கல்வியாகும்.
குரு உபதேசம் – 3391
தவத்திற்கு தலைவனும், ஞானத்திற்கும் தலைவன் முருகபெருமான்தான் என்பதை அறிந்து “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று முருகனை நோக்கி மந்திர ஜெபம் செய்தால், முதன் முதலில் தன்னைப் பற்றி அறியக் கூடிய அறிவு வரும். பொறிபுலன் வழியே செல்லும் மனதை கட்டுப்படுத்தி, தவத்திற்குரிய வைராக்கியத்தை பெறலாம். முருகனின் நாமமே மந்திரம் என்றும், அவன் திருவடியே வேதம் என்றும் அறிகின்ற உண்மைப் பேரறிவும் பெறுவான்.