குரு உபதேசம் – 3387
ஞானம் என்ற சொல்லே முருகப்பெருமானால்தான் உருவாக்கப்பட்டதாகும். ஞானம் என்பதே அறிவு, தெளிவு, உண்மை என்பதை அறியலாம். ஞானமே உண்மை, உண்மையே ஞானம். முருகனே ஞானம், ஞானமே உண்மை.
ஞானம் என்ற சொல்லே முருகப்பெருமானால்தான் உருவாக்கப்பட்டதாகும். ஞானம் என்பதே அறிவு, தெளிவு, உண்மை என்பதை அறியலாம். ஞானமே உண்மை, உண்மையே ஞானம். முருகனே ஞானம், ஞானமே உண்மை.
முருகப்பெருமான் திருவடியை பூசித்து ஆசி பெறுவதே சிறந்த பக்தி மார்க்கம் என்பதை அறியலாம்.
சைவத்திற்கும், பக்திக்கும், முக்திக்கும் சித்திக்கும் முற்றுப்பெற்ற மரணமிலாப் பெருவாழ்விற்கும் முருகனே தலைவன் என்று அறியலாம். முருகப்பெருமானின் ஆசியைப் பெற்று, சித்திபெற்ற மக்கள் அநேகம் அநேகம். இனி சித்திபெற இருப்பவரும் அநேகம் அநேகம். முக்திக்கும் சித்திக்கும் முருகன் திருவடியே துணை என்று அறிவதே அறிவாகும்.
பூஜை செய்வதற்குரிய அறிவும், அதற்குரிய தக்க சூழ்நிலையும் அமைந்து, முருகன் அருள் பெறுவதற்கான வாய்ப்பையும் பெறலாம்.