குரு உபதேசம் – 3383
மரணமிலாப் பெருவாழ்வையும், ஞானத்தையும் முதன் முதலாக கண்டுபிடித்தவனும், அறிந்தவனும், அறிந்து கடைத்தேறி வெற்றி பெற்ற முதல் மனிதனும் முருகனே என்றும், மனிதன் கடவுளும் ஆகலாம் என்ற பேருண்மையையும் அவன்தான் முதன்முதலில் கண்டவனும், அடைந்தவனும் ஆவான் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3382
இருவினையற்ற பெருந்தெய்வம் முருகன் திருவடியே, இருவினையறுக்க துணையாய் வரும் என்பதை அறியலாம். வினை வென்ற திருமுருகன் திருவடித் துணையின்றி, வேறொன்றாலும் வினை வெல்ல முடியாது என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3381
பாவ சுமைகளிற்கு காரணம் நாம் பல ஜென்மங்களில் உயிர்க்கொலை செய்து புலால் உண்டதாலும், யான் என்ற கர்வத்தாலும், கொடும் கோபத்தாலும், பொல்லாத காமத்தாலும், பேராசையினால் பிறர் பொருளை அபகரித்ததாலும், பிறர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுகின்ற காரணத்தாலும் வருகின்றது என்பதை அறியலாம்.