முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…
ஒரு கணப்பொழுதினில் உலகினில் திடீரென தோன்றி இந்த உலகையே தனது ஆட்சிக்கு கீழ்கொண்டு வந்து ஆட்சி செய்வான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.
ஒரு கணப்பொழுதினில் உலகினில் திடீரென தோன்றி இந்த உலகையே தனது ஆட்சிக்கு கீழ்கொண்டு வந்து ஆட்சி செய்வான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.
கோடானுகோடி யுகங்கள் தவம் செய்திட்ட சர்வவல்லமை பெற்ற முருகப்பெருமானே நேரில் ஆட்சி செய்ய இருப்பதினாலே எல்லா மக்களும் அச்சமின்றி வாழலாம் என்பதை அறியலாம்.
பசியாற்றக்கூடிய எண்ணம் எங்கிருக்கிறதோ? அது அறம். அந்த சிந்தனையே கடவுள் வாழுகின்ற இடம். பிறருக்கு பசியாற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலே அங்கே கடவுள் இருக்கிறான். கடவுளை எங்கேயும் தேடிப்போக வேண்டியதில்லை. தூயமனம் உள்ளவனே கடவுள். உண்மைப் பொருளுணர்ந்தவன் எந்த அளவுக்கு பிறர் மகிழ நடந்து கொள்கின்றானோ? அதுவே அறம், அதுவே தவம், அதுவே ஞானம், அதுவே முக்தி. அதுவே உண்மை ஆன்மீகம்.
இதுவரை கொடுமைகளால் அவதிப்பட்ட மக்களுக்காக வெகுவிரைவில் ஆறுமுகப்பெருமான் உலகில் தோன்றி அநீதிகளை கட்டுப்படுத்துவான் என்பதை அறியலாம்.