News
APRIL 2026
22nd April 2026
தினம் ஒரு அகவல் 208
சத்திய மாஞ்சிவ சத்தியை யீந்தெனக்
கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி – 208
சத்தியமாம் சிவ சத்தியை ஈந்து எனக்கு
அத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ்ஜோதி !
உண்மையின் வடிவமான (சத்தியம்) சிவத்தின் சக்தியை (அருள் சக்தியை) எனக்கு வழங்கி, அந்த ஆற்றலை (சித்திகளை) மேலும் மேலும் பெருகச் செய்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!


