News
AUGUST 2026
தினம் ஒரு அகவல் 410
நீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை
ஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி – 410
நீரினில் சுவைநிலை நிரைத்து அதில் பல்வகை
ஆர்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி
நீருக்குள் அதன் இயல்பான சுவை நிலையை நிலைபெறச் செய்து (நிரைத்து), அந்தச் சுவைக்குள்ளேயே பலவிதமான வேறுபாடுகளையும், இன்பங்களையும் நிறைவாக உண்டாக்கிக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதியே!


