Prasanna
குரு உபதேசம் – 3694
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சைவத்தலைவன் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி மனமுருகி பூஜித்திட்டால், பூஜிப்போர்க்கு சைவ உணவின் மீது நாட்டம் வருவது இயல்பேயாகும். இதுநாள் வரை அசைவ உணவு பழக்கத்திற்கு ஆளாகியிருந்தாலும் இன்றேனும் முருகனை வணங்கினால் முருகனது கருணையால் அசைவ பழக்கத்திலிருந்து விடுபட்டு பாவியாகாத உணவான சைவ உணவினை உண்டு நாமும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3693
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தயவே வடிவான தயாநிதி முருகப்பெருமானின் திருவடிகளை பற்றி பூஜிக்கும் மக்கள், நிச்சயம் பிறஉயிர்களுக்கு துன்பம் செய்ய மாட்டார்கள் என்பதை அறியலாம்.
மகான் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய கீர்த்தித் திருவகவல்
மகான் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய கீர்த்தித் திருவகவல் மகான் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய கீர்த்தித் திருவகவல் (மாணிக்கவாசகர்) எட்டாம்-திருமுறை-திருவாசகம் சோழநாடு காவிரி வடகரை கோயில் (சிதம்பரம், தில்லை) சிவனது திருவடிப் புகழ்ச்சி முறைமை; நிலைமண்டில ஆசிரியப்பா துவக்கப்பாடல் திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே சிவமயம் திருமந்திரம்-1598 சிவமயம் மகான் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய கீர்த்தித் திருவகவல் தில்லை மூதூர் ஆடிய … Read more
குரு உபதேசம் – 3692
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உயிர்களை வதைத்து விளையாட்டுகளை விளையாடுவதும், அப்படிப்பட்ட விளையாட்டுகளை கண்டு மகிழ்வதும் பாவம் என்பது முருகப்பெருமானால் உணர்த்தப்படும். முருகனை வணங்காது, இது பாவம் என்பதையும் அறியாது, தன் மன மகிழ்விற்காக ஏதேதோ காரணங்கள் சொல்லி உயிர்களை வதைப்பார்களேயானால், அவர் முருகப்பெருமானை வணங்காதவராயினும் சரி, வணங்குவோராயினும் சரி அவர்களுக்கு தக்க விதத்தில் முருகப்பெருமானால் உணர்த்தப்படும்.