Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4364

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இனி பிறவா மார்க்கமாகிய மரணமிலாப் பெருவாழ்வின் ரகசியத்தை அறியலாம். தொடர்பிறவிக்கு காரணமாய் இருப்பது உடம்பா? உயிரா? என ஆராய்ந்து பார்க்கும் போது உடல் மாசு காரணமாகத்தான் உயிர் மாசுபடுகிறது. உடல் மாசு நீங்கினால் உயிர் மாசு நீங்கும். உடல்மாசும் உயிர்மாசும் நீங்கி இனி பிறவாமையை அடைய விரும்புகிறவர்கள் ஞானபண்டிதன் முருகப்பெருமானின் ஆசியைப் பெறவேண்டும். முருகனது ஆசியைப் பெற விரும்பினால் தினமும் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், … Read more

குரு உபதேசம் 4363

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இயற்கை சீற்றங்கள் வருவதற்கு முன்னரே தன்னையும், தன்னை சார்ந்தோரையும் காக்கின்ற ஆற்றலும், அறிவும் வரும். இடர் செய்கின்ற அசுரர்களாகிய முரண்பட்ட மக்களிடத்திருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதை அறியலாம். பிற உயிர்களுக்கு ஜீவதயவின்றி கொடுமைகள் செய்கின்றவனும், இடையூறு செய்கின்றவர்களும் அசுரர்கள் என்றும், எல்லா உயிர்களிடத்தும் அன்பும் செலுத்தி ஜீவதயவை வளர்ப்பதோடு ஞானியர் திருவடித் துணை உடையவர்கள் தேவர்கள் எனவும் அறியலாம். கடவுள் நம்பிக்கையும், பாவ புண்ணியத்தில் நம்பிக்கையும் உள்ளவர்கள் … Read more

குரு உபதேசம் 4362

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஒருமுறையேனும் “முருகா” என்று முருகனின் நாமத்தை மனமுருகி சொல்லிவிட்டால் சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், அன்னதானம் செய்கின்ற அறிவும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். …………….. வித்தகன் முருகனை விரும்பியே பூசிக்க சத்தும் சித்தும் கைவசமாமே.

குரு உபதேசம் 4361

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் … ஞானிகள் ஆட்சியில் பங்கு பெறவும், ஞான ஆட்சியில் துன்பமின்றி வாழவும் விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து மாதம் ஒருவருக்கேனும் அன்னதானம் செய்தும், ஞானியர் திருவடி பூஜைகளை தவறாது செய்தும் தானதருமப் பணிகளுக்கு தொண்டுகள் செய்தும் வரவர, எந்தவித அச்சமும் இல்லாத வாழ்வை ஞானிகள் ஆட்சியில் வாழலாம்.

குரு உபதேசம் 4360

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் … முருகப்பெருமானால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கே தர்மஸ்தாபனத்தில் தொண்டுகள் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி முருகப்பெருமானால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டர்கள் மீது குறை காண்பவர்கள் முருகப்பெருமானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும், தொண்டர்களிடையே உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல் இது சகஜம் என்றும், சாந்தமாக இருந்து செயல்புரிய வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாமல் குறைகள் கூறினால் தர்மசெயல்கள் பாதிக்கப்படும் என்றும், தர்மம் பாதித்தால் தர்மதேவனாகிய முருகப்பெருமான் நம்மை தண்டிப்பான் என்பதையும் உணர்ந்து குறைகளை பொறுத்துக் … Read more

குரு உபதேசம் 4359

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் … ஆயிரம் கோடி அசுரர்களை நொடியில் அழித்து பண்புள்ள மக்களை காக்கின்ற வல்லமையுடைய வல்லவன்தான் முருகப்பெருமான். ஆயிரம் தாயினும் மிக்க தாயன்புடையவன் முருகப்பெருமான், அவன் கருணைக்கடல், தயவே வடிவானவன்தான். ஆனால் பண்புள்ள மக்களுக்கு இடையூறு செய்பவர்களை கண்டால் நொடிப்பொழுது தாங்கமாட்டான், அவன் கோபம் எல்லையில்லாமல் போய்விடும். தற்காலம் பண்புள்ளோர் மிகுந்த கொடுமைக்கு உள்ளாகியுள்ளதால் அனைவரையும் காக்க முருகப்பெருமானே நேரில் அவதாரமாக தோன்றியுள்ளான். இனிவரும் காலமெல்லாம் இவ்வுலகம் ஞானபண்டிதனாரின் நேரடி … Read more

குரு உபதேசம் 4358

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்திட்டால்… ஒருவனது இலட்சியம் உலக நன்மைக்காக இருக்குமானால், உயர்ந்த நோக்கமாக இருக்குமானால் அதை முருகப்பெருமான் அருளால் செய்து முடிக்கலாம். …………….. பாலனாம் முருகனை பணிந்தே போற்றிட ஞாலத்தை ஆள்வார் நமனும் அஞ்சுவன்.

குரு உபதேசம் 4357

முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெற்றிட்டால் … சிவராஜயோகம், ராஜயோகம் என்பவை பெரும் தவசிகளுக்கே, முருகனது அருளை முழுமையாக பெற்றவர்களுக்கே உரியது என்றும் மண், பெண், பொன்னாசைகளை விட்டவர்க்கே இவை கைகூடும் என்றும் சிவராஜயோகம், ராஜயோகம் என்ற பெயரிலே சொல்லிக் கொடுப்பதாக மக்களை நம்ப வைப்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்றும், ராஜயோகம் உணர்வால் உணர்த்த ஆசான் உடம்பின் உள்ளே சார்ந்திருந்து செய்யப்படுகின்ற மிகப்பெரும் யோகம் என்பதையும் அறியலாம். யோகம் கற்றுக் கொடுப்பதல்ல, ஆசான் உள்ளிருந்து உணர்த்த உணர்ந்து வழிநடத்த … Read more

குரு உபதேசம் 4356

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் … சைவ உணவில் நம்பிக்கையும், சைவ உணவை உண்ணுகின்ற வாய்ப்பையும் அசைவத்தை உண்ணாது சைவத்தில் தொடர்ந்து வைராக்கியமாக வருகின்ற வாய்ப்பையும் பெறுவதோடு முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி இடைவிடாது தொடர்ந்து பூஜை செய்கின்ற வாய்ப்பையும், சூழ்நிலையையும் பெறலாம் என்று அறியலாம். …………….. சைவத் தலைவன் சண்முகனைப் போற்றிட வையகம் போற்ற வாழ்வார் திண்ணமே. தூய்மையாம் முருகனை தோத்திரம் செய்திட வாய்மை குணமோடு வருகுமே நன்மை.