Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 40

40. சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம் ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி   சேகரமாம் பல சித்தி நிலைக்கெலாம் ஆகரமாம் சபை அருட்பெருஞ்ஜோதி !   திரண்டுள்ள பலவிதமான சித்தி நிலைகள் மற்றும் அரிய சக்திகள் ஆகிய அனைத்திற்கும் மூல இருப்பிடமாக, ஊற்றுக் கண்ணாக விளங்கும் சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 39

39. உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய அபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி   உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி !   உலகில் காணப்படும் இரண்டு எதிரெதிர் நிலைகளாகத் தோன்றுபவை அனைத்தும் உண்மையில் ஒன்றே என்று உணர்த்திய, எல்லா உயிர்களுக்கும் அச்சம் நீக்கி அடைக்கலம் கொடுக்கும் ஞானசபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 38

38. நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய் அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   நவம் தவிர் நிலைகளும் நண்ணுமோர் நிலையாய் அவம் தவிர் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   ஆன்மாவை கட்டுப்படுத்தும் ஒன்பது தத்துவ நிலைகளையும் (காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை, பிரகிருதி, குணம்) கடந்து எல்லோரும் அடைய விரும்பும் ஒரே நிலையாக விளங்கி, வீண் செயல்களையும் துன்பங்களையும் நீக்கிய ஞானசபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 37

37. சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும் அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   சுட்டுதற்கு அரிதாம் சுக அதீத வெளி எனும் அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   எந்த வார்த்தையாலும் சுட்டிக் காட்டுவதற்கு முடியாததாய், உலக இன்பங்களைக் கடந்த பேரின்பப் பெருவெளியாக விளங்கி, எட்டுவகையான சித்திகளுக்கும் மேலானதான சிற்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 36

36. சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   சாக்கிரஅதீதத் தனிவெளியாய் நிறைவு ஆக்கிய சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி போன்ற ஐம்புலன்களின் அனுபவங்களையும் துரியம், துரியாதீதம் போன்ற யோக நிலைகளையும் கடந்து தனியான பேரறிவாகிய வெளியாய் எங்கும் நிறைந்து, எல்லோராலும் புகழப்படும் சிற்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 35

35. இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம் அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமுமாம் அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   இயற்கையின் உண்மையாக  இருக்கின்ற, இயற்கையான இன்பமாகவும் விளங்குகின்ற, என்றும் சோர்வில்லாத அறிவு வடிவமான சிற்சபையிலே வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 34

35. எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள் அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   எவ்வகைச் சுகங்களும் இனிது உற அளித்து அருள் அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   எல்லா வகையான இன்பங்களையும் இனிமையுடன் தந்து அருள்புரியும் சிற்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 33

33. துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும் அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி   துரியமும் கடந்த சுக பூரணம் தரும் அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !   ஆனந்த நிலையான துரிய நிலையை கடந்த பேரானந்த நிலையான துரியாதீத நிலையில் கிடைக்கும் நிரந்தர பூரணப் பேரின்பத்தை ஞான வெளியான சிற்சபையில் திகழும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

தினம் ஒரு அகவல் 32

32. முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள் அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி   முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்தருள் அச்சுடராம் சபை அருட்பெருஞ்ஜோதி !   சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகிய முச்சுடர்களும் பொருந்துமாறு இயங்க உள்ள ஆதார சக்தியாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி. முச்சுடரின் இணைப்பே முக்திக்கு வழிவகுக்கும்.