Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 95

95. ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக் காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி   ஓமயத் திரு உரு உவப்புடன் அளித்து எனக்கு ஆமயத் தடை தவிர் அருட்பெருஞ்ஜோதி !   ஓம் – பிரணவ மந்திரம் ஓமயம் – பிரணவத் தேகம் ஆமயம் – பாசப்பிணைப்பு ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமே ஆன ஒளித் திருமேனியை (தேகத்தை) எனக்கு மகிழ்ச்சியுடன் (உவப்புடன்) வழங்கி, பாசப் பிணைப்பால் வரும்  தடைகள் அனைத்தையும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 94

94. சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி   சேதனப் பெருநிலை திகழ் தரும் ஒரு பரை ஆதனத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !   சேதனம் – உணர்வுள்ள ஞான நிலை பரை ஆதனம் – சக்தி இருப்பிடம் உணர்வுள்ள எல்லாப் பொருள்களிலும் (சேதனம்) உள்ள மிக உயர்ந்த ஞான நிலையில் பிரகாசிக்கின்ற ஒப்பற்ற பராசக்தியின் இருப்பிடத்தில் உயர்ந்து வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 93

94. பொதுவது சிறப்பது புதியது பழயதென் றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி   பொதுவது சிறப்பது புதியது பழயது என்று அது அதுவாய்த் திகழும் அருட்பெருஞ்ஜோதி !   எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகவும், சிலருக்குச் சிறப்பானதாகவும், புதிதாகவும், பழையதாகவும் என்று சொல்லப்படும் அந்தந்தத் தன்மைகளின் வடிவமாகவே விளங்கிப் பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 92

92. துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி   துன்பு அறுத்து ஒரு சிவ துரிய சுகந்தனை அன்பருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி !   துரிய சுகம் – நான்காம் நிலை (விழிப்பு, தூக்கம், சொப்பனம் கடந்த ஞான நிலை) உயிர்களின் துன்பங்களை முற்றிலுமாக நீக்கி, ஒப்பற்ற சிவத்தின் துரிய நிலையால் கிடைக்கும் பேரின்பத்தை, அன்பு நெறியில் உள்ள அடியார்களுக்கு மட்டுமே வழங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 91

செடியறுத் தேதிட தேகமும் போகமும் அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி   செடியறுத்தே திட தேகமும் போகமும் அடியருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி !   செடியறுத்து – வல்வினைகளை போக்கி வல்வினைத் துன்பங்கள் அனைத்தையும் அழித்து, அடியவர்கள் செழித்து வாழும் பொருட்டு, ஒளி உடலையும் (பிரணவ தேகம்), நிலைத்த பேரின்பத்தையும் (போகம்) தன்னுடைய அடியார்களுக்கு மட்டுமே வழங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 90

90. எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி   எம் புயக் கனி என எண்ணுவார் இதய அம்புயத்து அமர்ந்த அருட்பெருஞ்ஜோதி !   அம்புயம் – தாமரை எம்புயம் – உள்ளங்கை தியானித்து நினைப்பவர்களுக்கு உள்ளங்கையில் இருக்கும் இனிய கனி போல அருள்பாலிக்கும், உள்ளமாகிய தாமரை மலரில் (இதய கமலத்தில்) வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 89

89. மந்தண மிதுவென மறுவிலா மதியால் அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி   மந்தணம் இதுவென மறுவிலா மதியால் அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி !   மந்தணம் – மறைபொருள்   மறு – குற்றம் அந்தணர் – ஞானம் பெற்றவர் அனைத்துக்கும் மூலமான மெய்ப்பொருள் அல்லது இரகசியம் என்பதை உணர்ந்து, குற்றம் நீங்கிய, களங்கமற்ற தூய அறிவைக் கொண்டுள்ள ஞானிகளால் போற்றித் துதிக்கப்படும் பேரொளி அருட்பெருஞ்ஜோதி ஆகும்.

தினம் ஒரு அகவல் 88

உபரச வேதியி னுபயமும் பரமும் அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி   உபரச வேதியின் உபயமும் பரமும் அபரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி !   பரம் – மேல் உலகம்   அபரம் – கீழ் உலகம்   ரசவேதி – ரசவாதம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், உலகப் பொருட்களை மாற்றியமைக்கும் இரட்டை இயல்பாகவும், அதே சமயம், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட மூலமாகவும் (பரம்), உலகப் பொருட்களாக (அபரம்) உள்ளும் புறமும் நிறைந்துள்ளதாகவும் விளங்குகிறார்.

தினம் ஒரு அகவல் 87

87. சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும் அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி   சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும் அகரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி !   ஓங்கார பிரணவமான “ஓம்” என்பதிலும், மற்றும் பஞ்சபூதங்களின் சூட்சும நிலையிலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கிறார்.