குரு உபதேசம் 4347
முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஒரு செயலை செய்வதற்கு முன்னரே தாம் செய்யும் செயலிலே உள்ள நன்மை தீமைகளைப் பற்றி ஆராய்ந்து உணர்ந்து தெளிந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வான்.
முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஒரு செயலை செய்வதற்கு முன்னரே தாம் செய்யும் செயலிலே உள்ள நன்மை தீமைகளைப் பற்றி ஆராய்ந்து உணர்ந்து தெளிந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வான்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இனி வெகு விரைவில் உலகப்பெருமாற்றம் குறுகிய காலத்திற்குள்ளாகவே நடந்து விடும் என்பதை அறியலாம். ஞானசித்தர்கள் ஆட்சி நடக்கின்ற ஞானயுக ஆட்சி காலத்திலே சித்தர் பெருமக்களே ஆட்சி நடத்துகின்றவர்களை சார்ந்து ஆட்சி நடத்துவார்கள் என்றும் இறைவனே மனிதனைச் சார்ந்து நடத்துகின்ற ஒரு புரட்சிகரமான அற்புதமான ஞானஆட்சி காலத்திலே ஜாதிகளும் மதங்களும் இவ்வுலகினில் இருக்காது என்பதும், ஜாதியை, மதத்தை விரும்புவோர் ஜாதி, மதத்தின் பெயரால் பாகுபாடு பார்த்தல் கூடாது என்றும், … Read more
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : மனிதனாக பிறந்து விட்டால் மட்டும் போதாது அவன் உண்மையிலேயே மனிதனாக ஆக வேண்டும். மனிதனாக பிறந்தவன் தம்மை வழி நடத்துகின்ற தலைவன் முருகனின் நாமங்களை ஏதேனும் ஒருவிதத்தில் பார்த்தோ, பார்த்து படித்தோ, கேட்டோ அல்லது முருகனது பெயர்களை கூவி அழைத்தோ முருகனின் நாமத்தை எந்த வகையாயிலும் எப்போது கூற ஆரம்பிக்கின்றானோ அப்போதுதான் அவன் மனிதனாகவே ஆகிறான். அதுவரை அவன் மனிதனாக பிறந்தாலும் ஜீவதயவின் தலைவனை அழைத்திடாத பட்சத்தில் … Read more
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பாசமாகிய சந்திர கலையையும், பசுவாகிய சூரிய கலையையும், பதியாகிய சுழிமுனையில் அறியச் செய்து பதியாகிய சுழிமுனையில் தானும் ஒடுங்கியிருந்து அருள் செய்வான் முருகப்பெருமான் என்று அறியலாம். இந்த வாய்ப்பை பெற விரும்புகின்றவர்கள் தயவே வடிவான முருகனின் அருளை முழுமையாகப் பெற்றால்தான் கடைத்தேற முடியும். தயவின் தலைவன் முருகனது அருளைப் பெற முதலில் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தினமும் காலை … Read more
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற : வெல்ல முடியாத காமத்தை வென்ற முருகனின் திருவடிகளைப் பற்றி பூசித்தாலன்றி காமதேகத்தை வெல்ல முடியாது என்பதை அறியலாம். …………….. கடந்தான் கந்தனின் கழலிணைப் போற்றிட கடக்கத் துணையாம் கந்தன் கழலே. அற்புத முருகனின் அருளைப் போற்றவே கற்பக விருட்சம் கைவசமாமே. ஆமாறு வேலவன் அருளைப் போற்றவே காமதேனும் கைவசமாமே. வஜ்ர வேலோனை வாழ்த்தி வணங்கிட அட்சய பாத்திரம் அவருக்கே சித்தியே.
முருகப்பெருமான் திருவடிப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு தயவுகாட்டி நன்மைகள் செய்ய செய்ய நன்மை பெற்ற உயிரினங்களின் மகிழ்ச்சியே நன்மை செய்தோருக்கு அறிவாக மாறி அதாவது தயவே அறிவாக மாறி மேலும் மேலும் வளர்ச்சி பெறுகிறது. தயவு பெருக பெருக அந்த அறிவே சிறப்பறிவாகிறது. தயவு மேலும் மேலும் மேலும் பெருகிட சிறப்பறிவு கூடி பிறப்பு, வாழ்தல், முதுமையடைதல், தளர்ச்சியடைதல், இறத்தல் என்பவையும் அவற்றினிடையே உள்ள தொடர்பும், அதன் சூட்சுமமும் தெளிவாக தெரிவதோடு … Read more
முருகப்பெருமான் திருவடியை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானவர்க்கத்தை தோற்றுவித்தவன் முருகப்பெருமான்தான் என்பதையும், கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் நீக்கமற கலந்துள்ள முருகப்பெருமானின் உயர் பிறப்பான மனித வர்க்கத்தினுள்ளே ஏற்றத்தாழ்வை பார்க்கக் கூடாது. அப்படி பார்ப்பாராயின் எல்லா மனிதருள்ளும் உள்ள முருகப்பெருமானே அவர்களை தண்டிப்பான் என்பதையும் அறியலாம். ஆதலின் சாதி, மத, இன, மொழி, தேசத்தினால் மனிதர்களை பாகுபடுத்தி இழிவுப்படுத்தினாலோ, தண்டித்தாலோ, எல்லாம் வல்ல முருகப்பெருமானின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும் அறியலாம். …………….. முக்கண் … Read more
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானைத் தவிர மற்றோருக்கு வாசி நடத்தித்தரும் அதிகாரம் இல்லை என்பதை அறியலாம். ………………….. பயன் மிக்க முருகனின் பதத்தை போற்றிட நயமிக்க வாழ்வு நண்ணும் முக்தியே.