தினம் ஒரு அகவல் 93
94. பொதுவது சிறப்பது புதியது பழயதென் றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி பொதுவது சிறப்பது புதியது பழயது என்று அது அதுவாய்த் திகழும் அருட்பெருஞ்ஜோதி ! எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகவும், சிலருக்குச் சிறப்பானதாகவும், புதிதாகவும், பழையதாகவும் என்று சொல்லப்படும் அந்தந்தத் தன்மைகளின் வடிவமாகவே விளங்கிப் பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!


