குரு உபதேசம் 4263
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அஞ்ஞானியையும், மெய்ஞானியையும் அறிந்து கொள்ளலாம். அந்திவண்ணன் அழகன் முருகனை சிந்திக்கவே உண்டாம் சித்தி.
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அஞ்ஞானியையும், மெய்ஞானியையும் அறிந்து கொள்ளலாம். அந்திவண்ணன் அழகன் முருகனை சிந்திக்கவே உண்டாம் சித்தி.
முருகப்பெருமானைப் பூஜித்து ஆசி பெற்றிட்டால் : உயிரின் மீதும் குற்றமில்லை, உடம்பின் மீதும் குற்றமில்லை என்பதையும் இவ்வாறு ஏற்பட காரணம் நம்மை தோற்றுவித்த இயற்கைதான் இவ்விதம் செய்துள்ளது என்றும், இயற்கையன்னை மனிதனைத் தோற்றுவிக்கும் போதே காமதேகத்தையும் சேர்த்துத்தான் தோற்றுவித்தாள் என்பதையும் அறியலாம். ஏன் காமதேகத்தை தோற்றுவிக்க வேண்டும். மற்றைய எந்த ஜீவராசிகளும் தோன்றி மறைந்து தோன்றி மறைவதான பரிணாமத்தினை உடையது. ஆனால் இயற்கையை வென்று மரணமிலாப் பெருவாழ்வைப் பெறவும் ஒரு உயிரினம் வேண்டும் என்பதினாலே தான், மனிதனைத் … Read more
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள விரும்பினால் முருகப்பெருமான் திருவடிகளை வணங்கினால்தான் அறிய முடியும் என்றும், முருகப்பெருமானின் ஆசியைப் பெற்றால்தான் இவை நான்கையும் அடைந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும் என்பதையும் அறியலாம். அறம் பொருள் இன்பம் அருளிய முருகனை திறம்பட பூஜிக்க சித்தியே உண்டாம். சித்தியும் உண்டாம் திருவடி பூஜையால் முக்தியும் உண்டாம் மோட்சமும் உண்டாம். உண்டாம் நல்வினை … Read more
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : வீடு பேறு என்ற மோட்ச இலாபம் உண்டென்றால் அது முருகப்பெருமானின் திருவருளால்தான் முடியும் என்பதை அறியலாம். முருகப்பெருமான் திருவடியை வேண்டினால் வேண்டிய அனைத்தையும் பெற்று வெற்றியை எளிதில் அடையலாம். ஆண்டியாம் முருகனை அன்புடன் பூஜிக்க வேண்டிய அனைத்தும் விரைந்தே அருள்வான்.? வயலூர் முருகனை வாழ்த்தி வணங்கிட இயல்பான வாழ்வும் இன்பமும் உண்டாம்.
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கடினமான மும்மலத் திரையை விலக்க செய்து உள்ளேயுள்ள பெருஞ்ஜோதிச் சுடரை வெளிப்படச் செய்வான், ஜோதியை நம்முள்ளே தோன்றச் செய்து மரணமிலாப் பெருவாழ்வையும் நமக்கு அருள்வான் குருபரனே! குருவே என்றே கூவி அழைத்திட வருவேன் என்றே வரமும் அருள்வான். அருள்வான் முருகனும் அன்போடு அழைக்க இருளும் இல்லை இன்பமும் உண்டாம். உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட கண்டார்க்கு உண்டாம் காட்சி.
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : உடம்புதான் இருவினைகள் ஏற்படுவதற்கு காரணமாய் உள்ளது என்பதையும், உயிருக்கு இதில் சம்பந்தமில்லை என்பதையும் அறியலாம். முப்பாலும் கடந்த முனிவன் முருகனை தப்பாமல் பூஜிக்க தான் அவனாமே. புலன்வென்ற முருகனின் பொன்னடி பூஜிக்க நலம்பல பெற்று நாம் அவனாமே.
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவில் நம்பிக்கையை உண்டாக்கி கடைப்பிடித்திட வைராக்கியத்தையும் ஞானியர் திருவடி பூஜையினை தொடர்ந்து செய்திட தடைகளில்லாத வகையிலே வாய்ப்பும் வைராக்கியமும் கிடைக்கப் பெற்று அன்னதானம் செய்து ஜீவதயவை பெருக்குதற்கு வாய்ப்பையும் தந்து, அவர்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றி மேல்நிலையை அடையச் செய்வான் முருகப்பெருமான். புருவத்திடையே பொருந்தும் கலை இரண்டால் வருந்துவதும் இல்லை வாழ்வும் செம்மையே. செம்மையாம் முருகனின் திருவடியை பூசிக்க இம்மைக்கும் மறுமைக்கும் இடரேதும் இல்லை. வளியினை வாங்கி … Read more
முருகப்பெருமான் திருவடியை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முதல் மொழியாம், தன்னிகரற்ற மூத்த மொழியாம், ஞானமளிக்கும் மொழியாம், தத்துவார்த்த மொழியாம், தன்னை காப்பாற்றிக் கொள்ள வல்லதும், தன்னை கற்போரையும் காப்பாற்றும் வல்லமை மிக்கதுமான உயிர் மொழியாம் ஞானத்தலைவன், தவத்தால் தோன்றிய தனி மொழியாம் தமிழைக் கற்க கற்க, தலைவன் முருகன் ஆசியைப் பெறலாம் என்பதையும், தமிழைக் கற்பவர் இக வாழ்வாகிய இல்லற வாழ்விற்கு தேவையான பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் இனிவரும் ஞானசித்தர் காலமதனிலே உறுதியாக பெறலாம் என்பதையும், … Read more
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : உயிரினங்களிடத்து உள்ள பசியை அறிவதும், அதை நீக்கி அவ்வுயிர்களை இன்பமடைய செய்வதும், அதற்குரிய வாய்ப்பை பெறுவதுமே உயர்ந்த வேள்வி என்றும், பிற உயிர் பசிப்பிணி போக்கி மகிழ்வதே வேள்வியின் பயன் என்பதையும் அறியலாம். வேள்வியின் பயன் ஜீவதயவை தரவல்லதாய் இருக்க வேண்டும். பசிப்பிணியாற்றும் ஜீவதயவு வேள்வியின் பயனால் ஜீவதயவு பெருகி பெருகி, ஜீவதயவே வடிவான முருகப்பெருமானின் ஆசியை முழுமையாகப் பெற்று பசிப்பிணியாற்றும் வேள்வி செய்வோரை நிலை உயர்த்தி … Read more