Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4607

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பதவி, பணம், ஆட்படை, அதிகாரம், உடல் நலம், ஆரோக்கியம் அத்தனையும் முன்செய்த நல்வினையால் கிடைத்தது என்பதை அறியாமல், தவறாக பயன்படுத்துகின்ற மக்கள் கலியின் மாயையினாலே மிகுதியாக பெருகிவிட்டார்கள். ஆதலினாலே உறுதியாக இவ்வுலகினில் இயற்கை சீற்றம் வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குரு உபதேசம் 4606

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இயற்கை சீற்றங்கள் வரத்தான் செய்யும், அப்படி இயற்கை சீற்றங்கள் வந்தாலும் அகத்தீசனை வணங்குகின்றோரெல்லாம் இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4605

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முதுபெரும் ஞானிகள் அருளிய, சிவபுராணம், திருமந்திரம், திருஅருட்பா போன்ற ஞான நூல்களை படித்து பூஜிக்கின்ற ஆர்வம் உண்டாகி பக்தி நூல்களைப் படித்து, மனமுருகி பூஜித்து முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றுகின்ற வைராக்கியம் வரும்.

குரு உபதேசம் 4604

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. இப்பிரபஞ்சத்தில் இன்று ஒருவன் ஒரு செயலை, அது நன்மையோ தீமையோ செய்வானாகில் அது மீண்டும் அவனுக்கே வந்து சேரும் என்பது மாற்ற முடியாத, மறுக்க முடியாத உண்மையாகும். அது சற்று முன்பின்னாகவோ அல்லது பல ஜென்மங்களிலோ அவனது ஆன்மாவைப் பற்றி கண்டிப்பாக தொடர்ந்து அதன் விளைவுகள் அவனை அடைந்தே தீரும் எனும் மாற்ற முடியாத மறுக்க முடியாத உண்மையை முருகனருளால் உணர்வார்கள். கடவுளின் பெயரால் ஆடு, கோழி போன்ற உயிர்களை பலியிட்டால் … Read more

குரு உபதேசம் 4603

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. கடவுளின் பெயரால் உயிர்க்கொலை செய்து உயிர்களை பலியிட்டால் உயிர்க்கொலை செய்ய செய்ய எல்லா உயிர்களுக்கும் தாயான கடவுளின் கோபத்திற்கு ஆளாகுவதோடு உயிர் பலியிடும் நாட்டினில் இயற்கை சீற்றங்கள் உண்டாகி மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4602

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. ஞானத்திற்கு தலைவன் முருகனே என்பதை உணரலாம். ஞானத்தலைவன் முருகப்பெருமான் தான் உண்மைக் கடவுள் என்பதை உணர்ந்து வழிபட்டு கடைத்தேறிட உண்மை ஆன்மீகவாதிகளால் நாட்டினில் முருகனை வணங்குகின்ற மக்கள் அதிகரிப்பதினாலே முருகனை ஏராளமானோர் வணங்க வணங்க முருகனருளை அந்நாடு முழுமையாக பெறும். முருகனருளை பெற பெற மக்களிடையே ஜீவதயவு பெருகும், ஜீவதயவு பெருக பெருக உயிர்க்கொலை தவிர்க்கப்பட்டு சுத்த சைவநெறி பரவும், சுத்த சைவ நெறி பரவபரவ உலக உயிர்களெல்லாம் மகிழ்வுறும்.உலக உயிர்கள்மகிழ்வுற … Read more

குரு உபதேசம் 4601

அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. கடவுள் நம்பிக்கையும், பாவபுண்ணியங்களில் நம்பிக்கையும் கொண்டு தலைவனை வணங்கி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டவர்களான முற்றுப்பெற்ற ஞானிகளான திருக்கூட்ட மரபினில் வந்துதித்த உண்மை ஞானம் போதிக்கின்ற உண்மையான ஆன்மீகவாதிகளை உடைய நாடு எல்லா வளங்களையும் பெற்று செழித்து வளரும். உண்மை ஆன்மீகவாதிகளால் அரசு செம்மையாக நடந்து நல்லோர், பண்புடையோர், பத்தினி பெண்டிர், முதியோர் என அனைத்து தரப்பினரும் பாதுகாப்பான, வாழ்வை வளமோடு வாழ்வார்கள், நல்லாட்சி நடக்கும். போலி ஆன்மீகவாதிகள் பெருக பெருக போலி ஆன்மீகவாதிகளின் … Read more

குரு உபதேசம் 4600

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. தானமும், தவமும், யோகமும், ஞானமும் என மனிதன் கடைத்தேறி மரணத்தை வெல்லுகின்ற மார்க்கத்தின் படிநிலைகளையும், மனிதனின் வாழ்வை நெறிப்படுத்தும் சமுதாய சீர்திருத்த வழிமுறைகளையும் ஆதிமூலமாய் விளங்கி மனிதவர்க்கத்தின் ஒப்பற்ற தனிப்பெரும் தலைவனாய் விளங்கி ஞானமே வடிவினனாய் நின்று அருட்பெருஞ்ஜோதி சுடராய் சதகோடி சூரியபிரகாசமுடைய பேராற்றல் ஞானஜோதியாய் விளங்கி நின்று எல்லா உயிர்களுக்கும் இரங்கி இதம் புரிந்து அருளிக் காக்கின்ற ஆதிஞானத்தலைவன் முருகப்பெருமான்தான் தானத்திற்கும், தவத்திற்கும், யோகத்திற்கும், ஞானத்திற்கும் தலைவன் என்பதை அறியாமலும், … Read more