Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 412

நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 412   நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி   ஆருற – நிறைவு உண்டாகும்படி செய்த நீருக்குள்ளே (உயிர்த் தோற்றத்திற்குக் காரணமான) அடிப்படை ஆக்க சக்தியை (கருநிலையை) நிலைபெறச் செய்து, அந்தச் சக்தியிலிருந்து எண்ணற்ற வடிவங்களும், உயிர்களும் நிறைவுறும்படி நுட்பமாக வகுத்து அமைத்தருளிய பேரருள் ஒளியே!

தினம் ஒரு அகவல் 410

நீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை ஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி – 410   நீரினில் சுவைநிலை நிரைத்து அதில் பல்வகை ஆர்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி   நீருக்குள் அதன் இயல்பான சுவை நிலையை நிலைபெறச் செய்து (நிரைத்து), அந்தச் சுவைக்குள்ளேயே பலவிதமான வேறுபாடுகளையும், இன்பங்களையும் நிறைவாக உண்டாக்கிக் கொடுத்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 408

நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல் ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 408   நீரிடைப் பூவியல் நிகழ்உறு திறவியல் ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி   நீர், பூமி உட்பட எங்கும் நிறைந்துள்ள இயற்கையின் செயல்பாடுகளையும், அவற்றின் ஆற்றல்களையும், திறன்களையும் மிகச் செம்மையாக வகுத்து நிலைநிறுத்திய பேரருள் ஒளியே!

தினம் ஒரு அகவல் 406

நீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 406   நீரினில் பசுமையை நிறுத்தி அதில்பல ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி   நீர் என்னும் பூதத்தில், தாவரங்கள் மற்றும் நிலத்தின் வளமான பசுமைத் தன்மையை நிலைபெறச் செய்து, அதன் மூலம் கிடைக்கும் பலவிதமான உணவுப் பொருட்களும் இன்பங்களும் உயிர்களுக்குக் கிடைக்கப் பொருந்தும்படி அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 404

நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும் ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 404   நீரினில் தண்மையும் நிகழ்ஊ ரொழுக்கமும் ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி   தண் – குளிர்ச்சி நீரின் இயல்பான குளிர்ச்சிப் பண்பையும், அது பாயும் ஒழுங்கான ஓட்டத்தையும் (இயக்கத்தையும்) உலக உயிர்கள் இன்புற்று வாழும்படி முறையாகப் பகுத்து அமைத்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 402

மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும் அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 402   மண்இயல் பலபல வகுத்து அதில் பிறவும் அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி   பூமியின் இயல்பான அம்சங்களை (மண் வகைகள், வளங்கள்) பல பிரிவுகளாக வகுத்து அமைத்து, அந்தப் பூமியின் பயன்பாட்டினை, சமநிலையாக பொருந்தும்படி செய்தருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 400

மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 400   மண் இடைப் பக்குவம் வகுத்து அதில் பயன் பல அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !   நிலத்தில் உயிர்கள் வாழ்வதற்கான முதிர்ந்த (பக்குவமான) தன்மையை உண்டாக்கி, அந்தப் பக்குவத்தின் விளைவாக உலகத்தாருக்குப் பலவகையான நன்மைகளும் பயன்களும் கிடைக்கப் பெறும்படி செய்தருளிய பேரருள் வடிவமே அருட்பெருஞ்ஜோதி.

தினம் ஒரு அகவல் 398

மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி  – 398   மண்ணுறு நிலை பல வகுத்து அதில் செயல் பல அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !   நிலப் பூதத்தில் பல வகையான இயல்புகளை அமைத்து, அந்த இயல்புகளின் மூலம் பலதரப்பட்ட செயல்களும் இயக்கங்களும் உலகத்தில் நடக்கும்படிச் செய்தருளிய பேரருள் வடிவமே அருட்பெருஞ்ஜோதி.