தினம் ஒரு அகவல் 302
கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண் டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி – 302 கூற்றுதைத்து என்பால் குற்றமும் குணங்கொண்டு ஆற்றல் மிக்க அளித்த அருட்பெருஞ்ஜோதி ! எமனை அழித்து (கூற்றுவனை உதைத்து), என்னுடைய குற்றங்களையும் (குறைகளையும்) தன் கருணையால் குணங்களாக மாற்றி, மிகுந்த வல்லமையை எனக்கு வழங்கி அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


