தினம் ஒரு அகவல் 336
உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி – 336 உலகெல்லாம் பரவ என்னுள்ளத்து இருந்தே அலகு இலா ஒளி செய் அருட்பெருஞ்ஜோதி ! உலக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்திப் புகழும்படி, என்னுடைய உள்ளத்திலேயே நிரந்தரமாக வீற்றிருந்து, அளவிட முடியாத ஞான சக்தியையும், ஒளியையும் என்னுள் வெளிப்படுத்திய அருட்பெருஞ்ஜோதியே!


