குரு உபதேசம் 4202
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : இக வாழ்வாகிய இல்லற வாழ்வை செம்மையாக நடத்துவதற்கும், பரவாழ்வாகிய மோட்ச லாபத்தை அடைவதற்கும் முருகப்பெருமான் திருவடியினாலன்றி வேறெந்த வகையிலும் பெற முடியாது என்று அறியலாம். முக்கண் மைந்தன் முருகன் திருவடியே தக்க துணையென்றே சாற்றுதல் நலமே.