admin
குரு உபதேசம் – 4153
முருகனை வணங்கிட : ஞானம் என்ற சொல்லே முருகப்பெருமானால்தான் வந்தது என்பதை அறிந்தும், ஞானத்தின் தலைவன் ஞானம் அளிப்பவனும் முருகனே என அறியலாம். மகத்துவம் பொருந்திய மாமுனிவன் முருகனை அகத்துள் வைத்து ஆராதனை செய்வோம். அள்ளக் குறையா அட்சய பாத்திரம் வள்ளல் முருகன் வழங்கிய கொடையே.
குரு உபதேசம் – 4152
முருகனை வணங்கிட : மக்களை வழிநடத்தவல்ல சமூக சான்றோர்க்கும் மக்களை கடைத்தேற்றிடவல்ல நெறி உரைத்து இம்மை மறுமைக்கு உபாயமளிக்கும் ஆன்மீக சான்றோர்க்கும் அருள் செய்யும் வல்லமை ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானுக்கே உண்டு என்பதையும் அறியலாம். செந்தழலாம் முருகனின் செவ்வேள் திருவடியை வந்தித்தே வாழ்த்துதல் நலமே! வற்றா கருணை வழங்கும் முருகனை சற்றேனும் சிந்திக்க தானவனாமே. ஆற்றலாம் முருகனின் அருளை தினமும் போற்றியே வாழ்வர் புண்ணியரே.
குரு உபதேசம் – 4151
முருகனை வணங்கிட : தன்னை அறிந்து தகைமை பெற தமிழே துணை என்பதை அறியலாம். என்றும் இளமையாக மரணமற்று முருகப்பெருமான் இருப்பது போலவே முருகனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழும் என்றும் இளமையாகவே இருப்பதையும், என்றும் அழியாமலும் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம். தமிழ் ஞானமொழியாகும். உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள விரும்பினால் தமிழைக் கற்றால் அன்றி வேறு மார்க்கமில்லை. தமிழ் மொழி மட்டுமே உடம்பையும், உயிரையும் பற்றி விளக்கி மரணமிலாப் பெருவாழ்வை அடைய உதவும் மொழியாகும். … Read more
குரு உபதேசம் – 4150
முருகனை வணங்கிட : உடம்பிற்கு அதிக சக்தி தந்தால் காமத்தை உண்டு பண்ணுமென்றும், சக்தி தராவிட்டால் உடம்பு நலிந்து விடும் என்றும், மிகுதியான உணவு மிகுதி காமமாக மாறுவதினாலே காமம் அதிகமாகி ஞானம் கெட்டுவிடும். உணவு இல்லையேல் உடம்பு நலிந்து ஞானம் கெட்டுவிடும். உடம்பு என்பது உணவின் அடிப்படை, ஞானமும் யோகமும் உடம்பின் அடிப்படையில் வருவது. ஆதலின் உடம்பை காக்க உணவினை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள வேண்டும். ஞானம் அடைய உடம்பை கட்டுப்பாடாக வைத்து கொள்ள வேண்டும். … Read more
குரு உபதேசம் – 4149
முருகனை வணங்கிட : செய்கின்ற செயல்கள் அனைத்தும் பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணக்கூடிய செயல்களாகவே அமைவதை அறியலாம். முற்றும் உணர்ந்த முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெறுவதனாலே நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தும் பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்ற செயல்களாகவே அமையும்.
குரு உபதேசம் – 4148
முருகனை வணங்கிட : பிறஉயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும் உதவி செய்கின்ற வாய்ப்பையும் பெறலாம். கோடியுகம் தவம்செய்த குகனைப் போற்றி பாடிப் பணிவதே பண்பு. ஆற்றலாம் முருகனின் அடியைப் போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். அருளாளன் முருகனின் அடியை போற்றிட இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்.
குரு உபதேசம் – 4147
முருகனை வணங்கிட : பசி, காமம், நரை, திரை, மூப்பு, பிணி ஆகியவற்றை வென்று, என்றும் இளமையாக அழிவிலாத ஒளி உடம்பை பெற்றவன்தான் முருகப்பெருமான். அவனது திருவடியைப் பற்றி பூஜித்து ஆசி பெறுவதே உண்மையான அறிவும், சாகாக்கல்வியும் ஆகும். பற்றற்ற முனிவன் பாதம் பணிந்திட பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் தரும். கற்றறிந்து சொன்ன கருத்து இதுவாகுமே உற்றது சொன்னோம் ஓதி உணர்வீர்.