Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4145

முருகனை பூஜித்திட : பொறிபுலன்களை அடக்கவும், உண்மைப் பொருளை அடையவும் வாய்ப்பை பெறலாம்.

குரு உபதேசம் – 4144

முருகனை பூஜித்திட :  உணவிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவையும், சிந்தையில் தூய்மை உண்டாகி சிந்தையில் சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், செயல் தூய்மை உண்டாகி செயலிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், சொல்லிலே தூய்மை உண்டாகி, சொல்லிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும், பார்வையிலே சைவத்தை கடைப்பிடிக்கின்ற அறிவும் பெற்று தீவிர சைவநெறி நின்று முருகனது ஆசிகளை முழுமையாக பெறலாம். உணவிலே சைவம்   :      தாவர உணவினை மட்டும் மேற்கொள்ளுதல். சிந்தையில் சைவம்  :      எந்த வகையிலும் பிறஉயிர்களுக்கு சிந்தையில் கூட … Read more

குரு உபதேசம் – 4143

முருகப்பெருமானை பூஜித்திட்டால் : காலத்தையும் அறிந்து வெல்லலாம், காலனையும் அறிந்து வெல்லலாம். காலத்தையும் காலனையும் வென்று பொடிப்பொடியாக்கிய கந்தபெருமான் திருவடியைப் பற்றி பூசிப்பவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பெறுவார்கள். கருணைக்கடல் கந்தபிரான் திருவடியை மனமுருகி பூஜித்தால்தான் காலத்தை வென்று காலனையும் வெல்கின்ற சாகாக்கல்வியை கற்க முடியும். அதை விடுத்து எத்துணை கல்வி கற்றாலும் பயனில்லை, எத்துணை அறிவு இருந்தாலும் பயனில்லை, எத்துணை ஆற்றல் இருந்தாலும் பயனில்லை, வெல்லற்கரிய மாமாயை வெல்லும் சாகாக்கல்வியை கற்காவிட்டால் எந்த பயனும் இல்லை … Read more

குரு உபதேசம் – 4142

முருகனை வணங்கிட : பெறுதற்கரிய மானுட பிறவியைப் பெற்றவர்கள், இந்த உடம்பின் துணை கொண்டே பரவாழ்வை அடைய செய்கின்ற முயற்சிகளும், செயல்பாடுகளுமே சாகாக்கல்வி என்பதையும் அறியலாம். சாகாக்கல்வி கற்பிப்பது அன்று, கற்பதும் அன்று. அது முருகப்பெருமானின் அருளால் அவரவருள்ளும் எழுகின்ற ஞானக்கல்வியாகும். அப்படிப்பட்ட ஞானக்கல்வியை கற்று ஞானம்அடைய விரும்புகின்றவர்கள் முதலில் உயிர்க்கொலை தவிர்க்க வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தினம்தினம் தவறாமல் காலை பத்து நிமிடமும் மாலை  பத்து நிமிடமும் … Read more

குரு உபதேசம் – 4141

முருகா என்றால்: காமம் அற்று போகும். பொறாமை நம்மை விட்டு விலகும். கோபம் நீங்கிவிடும். பேராசை அறவே இருக்காது பழிவாங்கும் உணர்ச்சி ஏற்படாமல் பகைவனுக்கும் அருள் செய்யும் மனப்பாங்கு வரும். லோபித்தனம் நீங்கி தயைசிந்தை உண்டாகும். தாய்மை குணமுடைய முருகப்பெருமானது திருவடிகளைப் பற்றி பூசித்தால் நம்மிடம் உள்ள தீயன ஒழிந்து நன்மைகள் அனைத்தையும் பெறுவதோடு மேற்கண்ட குணப்பண்புகளை முழுமையாகப் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

குரு உபதேசம் – 4140

முருகா என்றால்: பல பல ஜென்மங்களிலே செய்த பாவங்களையெல்லாம் அவரவர் செய்திட்ட பாவத்தின் பயனை ஒவ்வொன்றாக அனுபவிக்க செய்து பாவவினை நீக்கி காத்து, இரட்சித்து, வீடுபேற்றினை அருள்வான் முருகன் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4139

முருகா என்றால்: உலக நன்மைக்காகவே அவதாரம் செய்தவன்தான் முருகப்பெருமான் என்றும் அவன் திருவடியை பற்றி பூசித்து ஆசிபெறுவதே அறிவு என்றும் அதுவே சாகாக் கல்வி என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 4138

முருகா என்றால்: பொருள் மீது பற்றறச் செய்தும், பொது சேவையில் ஆர்வத்தை உண்டு பண்ணியும், தன் திருவடியை தொடர்ந்து பற்றச் செய்தும், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய ஆர்வத்தை உண்டு பண்ணியும் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்வான் முருகப்பெருமான்.

குரு உபதேசம் – 4137

முருகா என்றால்: வீடு கட்டுதல், சுப செயல்கள் செய்தல், ஆக்க பணிகள் செய்தல் என்ற அனைத்திற்கும் கடன் வாங்கி செய்யாமல் இருக்கின்ற சூழ்நிலைக்கேற்ப வாழ்கின்ற மனவலிமை பெற்று நலமுடன் வாழ்வார்கள்.